பிரதமர் மோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, பா.ஜ.க சார்பில் கோவையில் 73 ஜோடிகளுக்கு நாட்டு மாடு உள்ளிட்ட 73 சீர்வரிசைகளோடு இலவச திருமணம் நடத்தப்பட்டது. இதில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதுபோல, காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

அண்ணாமலை

ஆனால் கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது. கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கியே ஆக வேண்டும். இந்த பிரச்னைகளை இரண்டு மாநில அமைச்சர்களும் பேசி தீர்த்திருக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் ஒரு மாத காலமாக மௌனமாக இருந்ததால், நிலைமை கைமீறி மத்திய அரசிற்கு சென்றுவிட்டது.” என்றார்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “நல்ல போலீஸ்காரர்களை பார்த்தால் திருடனுக்கு பயம் வரத்தான் செய்யும். தேள் கொட்டியதுபோல தான் இருக்கும். என்னுடைய தரத்தை தாழ்த்தி நான் எப்பொழுதும் அவதூறான வார்த்தைகளை முன்வைக்க மாட்டேன். அரசியல் களம் மாறிவிட்டது என தலைவர்கள் புரிந்து கொள்கிறார்கள். இது இளைஞர்களுக்கான அரசியல். இன்னும் பழைய பஞ்சாங்கத்தை பேசிக் கொண்டிருந்தால் யாரும் ஓட்டு போட முடியாது. எப்படிப்பட்ட தலைவர்கள் வரவேண்டும் என இளைஞர் சக்தி தீர்மானிக்கிறது.

அண்ணாமலை

தமிழகத்தில் அந்த மாற்றம் வந்தே தீரும். இன்னொரு கட்சியை தாழ்த்திதான் முன்னேற வேண்டும் என்ற அவசியம் பா.ஜ.க-வுக்கு இல்லை. எங்களுடைய உழைப்பில் இந்த கட்சி வளர வேண்டும். இதற்கு முன்பு யாரெல்லாம் தமிழகத்தில் அமைச்சர்களாக இருந்து வசூல் செய்துள்ளார்களோ, அவர்கள் அனைத்தையும் வசூலாகத்தான் பார்க்கிறார்கள். அவர்களெல்லாம் மந்திரகளாக இருப்பதே வசூலிப்பதற்காகத்தான். அதனால் நாமும் நடைப்பயணம் மேற்கொள்வதை வசூல் என நினைத்துக் கொள்கிறார்கள்.

வசூல் செய்து யாரெல்லாம் அமைச்சர்களாக இருந்தார்களோ, அவர்களுக்கெல்லாம் நேர்மை என்கின்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாது. நேர்மை அரசியல் செய்பவர்களுக்குத்தான் நான் செய்யும் நேர்மை அரசியல் தெரியும். அவர் இப்படி பேசுவது புதிதல்ல. பா.ஜ.க-வின் வளர்ச்சி பார்த்து பொறாமையில் பேசுகிறார். அவருடைய தொகுதிக்கு இன்னும் பா.ஜ.க செல்லவில்லை. போகும்போது பாருங்கள். எங்கெல்லாம் பா.ஜ.க இல்லை என்று கூறினார்களோ, அங்கெல்லாம் சாதாரணமாக 12,000-க்கும் மேற்பட்டோர் நடைப்பயணம் மேற்கொள்கிறார்கள். சும்மா பந்தலை போட்டு அமரவைப்பது பெரிதல்ல. தலைவரை நடந்து அமரவைக்க வேண்டும். சில தலைவர்களுக்கு அரசியல் களம் மாறிவிட்டது என்பதை புரிந்து கொள்வதற்கே இன்னும் 10 ஆண்டுகள் வேண்டும். உதயநிதி தனியாக வர முடியவில்லை.

அண்ணாமலை

கூட்டம் சேர்க்க முடிவதில்லை. ஒவ்வொரு மேடையிலும் நான்கு அமைச்சர்கள் உள்ளார்கள். நான்கு அமைச்சர்களும் அவர்கள் ஊரில் இருந்து வண்டிகளை திரட்டி கொண்டு மக்களை சேர்க்கிறார்கள். அப்படி இருந்தும் இருக்கைகள் காலியாகத்தான் உள்ளது. பொது நல விழாவிலும் கூட்டம் வரவில்லை என்றால் மக்கள் தி.மு.க-வையும், உதயநிதி ஸ்டாலினயும் நிராகரித்துள்ளார்கள். அதனுடைய பிதற்றலாகத்தான் சனாதன தர்மம், இந்து தர்மத்தை அழிப்போம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது. அறிஞர் அண்ணா, ‘திராவிடக் கொள்கையில் குடும்ப அரசியல் வேண்டாம்.’ என்று கூறிய மாமனிதர். கஷ்டப்பட்டு வந்து சுத்தமான அரசியலை கொடுக்க வேண்டும் என நினைத்தார். தற்பொழுது அண்ணாதுரைக்கு சாதகமாக வருபவர்கள் அவரைப்போல் நடந்து கொள்கிறார்களா… அண்ணாதுரையின் வழிப்படி அவர்கள் நடந்து கொண்டால் அவர்கள் கூறுகின்ற கருத்துகளை நான் ஏற்றுக் கொள்கிறேன். அண்ணாதுரைக்கு நான்கு வளர்ப்பு குழந்தைகள் இருந்தார்கள். நான்கு பேரும் அரசியலுக்கு செல்லக் கூடாது எனக் கூறினார். தமிழகத்தில் எத்தனை பெயருக்கு அண்ணாதுரையின் குடும்பத்தினர் பெயர் தெரியும். ஆனால் இன்றைக்கு வந்தவர் போனவர்கள் எல்லாம் அவர்களது குடும்ப பெயரை போஸ்டர் அடித்து ஓட்டுகிறார்கள். அண்ணாதுரையை நான் என்றும் தவறாகப் பேசியது இல்லை. சம்பவத்தில் நடந்ததை எடுத்துக் கூறினேன்.

என்னிடம் மிரட்டல் உருட்டல் எல்லாம் வேலைக்கு ஆகாது. எனக்கும் கடும் சொற்கள் வரும். நேர்மையை பற்றி சி.வி.சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது. சி.வி.சண்முகம் 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு பின்பு ஒரு மாதிரி பேசுவார். காவல்துறையில் துப்பாக்கி பிடித்த கை இது. அவர் மந்திரியாக இருக்கும்போது என்னென்னவெல்லாம் செய்தார் என்பது எனக்கு தெரியும். அதற்குள் நான் போகவில்லை. என்னுடைய நேர்மையை கொச்சைப்படுத்தினால் யாராக இருந்தாலும் நான் விடமாட்டேன். இது என்னுடைய தன்மான பிரச்னை. கூட்டணி தேவைதான். ஆனால் அதற்காக அடிமையாக இருக்க முடியாது. கூனி கும்பிட்டு பதவிக்கு வந்தீர்கள் என்றால்.. .அப்படிப்பட்ட அவசியம் பா.ஜ.க-விற்கு கிடையாது. பா.ஜ.க தனித்தன்மையாக 2026-ம் ஆண்டு பவருக்கு வரும். இன்னொரு கட்சியின் குளோனாகவோ, பி டீமாகவோ, சி டீமாகவோ வராது. எல்லாருக்கும் கூட்டணி தேவை இருக்கிறது. வேண்டாம் என்று சொல்லக்கூடிய பலசாலிகள் யாரும் இல்லை.

சி.வி.சண்முகம்

எதையும் ஆட்டை போடுவதற்காக நான் வரவில்லை. சனாதான தர்மத்தையும் தமிழ் கலாசாரத்தையும் காப்பதற்காக அரசியலுக்கு வந்தவன் நான். எனவே என் பேச்சு சூடாகத்தான் இருக்கும். கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது என கூறுவதெல்லாம் என்ன பேச்சு. மேடை கிடைத்துவிட்டது.. மைக் இருக்கிறது என்று எதையும் பேசிவிடக் கூடாது. வாய் இருக்கிறது என்பதற்காக பேசிவிட்டு எஸ்கேப் ஆகும் ஆள் இல்லை. என்னிடமும் அடித்து பேச ஆட்கள் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நேர்மையாக பேச வேண்டும். என்னுடைய நேர்மையை கொச்சைப்படுத்தினால் அவர்களைப் பற்றி தோண்ட ஆரம்பித்து விடுவேன். நான் தோண்டுவேன் என்பதும் தெரியும். எந்த அளவுக்கு தோண்டுவேன் என்பதும் தெரியும். நானும் எடப்பாடியாரும் போனில் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். குறிப்பிட்ட 3 பேர்தான் என்னை இப்படி பேசுகிறார்கள். தலைவருக்குக்கீழ் இருப்பவர்கள் எப்படி பேசுகிறார்கள் என்பது அவரின் வெளிப்பாடு. அது தலைவரின் ஆளுமை. எனக்குக்கீழ் இருப்பவர்கள் பேசினால் நான் கண்டிப்பேன். அது எப்படி இவர்கள் மட்டும் திரும்பத் திரும்ப பேசுவார்கள். என் நேர்மையை கொச்சைப்படுத்தினால் எந்த அளவுக்கும் போவேன்” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: