உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:

பங்கஜம் கோபால ஸ்வாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: நம் -பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நேசிப்பவர்களாக, அவரின் ஆதரவாளர்களாக, கோடிக்கணக்கானவர்கள் திகழ்வதற்கான, அரசியல் கலப்படமற்ற சில காரணங்கள்…

* இவரை என்றாவது, கலைந்த தலை, உடை, மற்றும் குழப்பமான மனநிலையில் யாராவது கண்டதுண்டா?

* நம் பிரதமர், ஒரு காவி அங்கி அணிந்த துறவியையும், ராணுவ உடை தரித்த சிப்பாயின் மிடுக்கையும், சாதாரண உடையில் உள்ள ஒரு தெய்வீக இளவரசரையும் ஒத்திருப்பது தான்

* எந்த உலகத் தலைவர்கள் மத்தியிலும், மோடியின் ஆளுமை மேலோங்கி காணப்படும்

* நாட்டின் பிரதமராக மிக உயர்ந்த பதவியில் இருந்த போதும், தன் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு போதும் ஆதாயம் செய்ததில்லை; அவர்களை ஊக்குவித்ததும் இல்லை. அவர்கள், வெகு சாதாரண வாழ்க்கையே வாழ்கின்றனர்

* மேலும் அவர், ஒருபோதும் தன் சொந்த நலனுக்காக, விடுமுறையோ, ஓய்வோ, எடுத்ததே இல்லை

* எப்போது பேச வேண்டும், எப்போது மவுனமாக இருக்க வேண்டும் என்பது அவருக்கு கைவந்த கலை

* இந்த, 73 வயதிலும் ஓய்வின்றி ஓடி ஓடி உழைத்தாலும், ஒருபோதும் களைப்பாகவோ, அசதியாகவோ, காணப்பட்டதே இல்லை. மேலும் அவரிடம், மிகச்சிறந்த நகைச்சுவை உணர்வும் அமைந்திருப்பது, அற்புதம் கத்தியைப் போன்ற கூர்மையான பேச்சு, கச்சிதமான தெளிவு, திறன் மிக்க வார்த்தை பிரயோகம் போன்றவை மோடிஜியின் தனி முத்திரை

* முடிவெடுக்கும் திறன், புத்திசாலித்தனம், சரியான நேரத்தில், சரியான முடிவை அறிவித்து செயல்படுத்துதல், முழு ஈடுபாடு போன்றவை, அவரிடம் இருக்கும் தனித்தன்மைகளாகும்உலகின் எந்த கோடியில் தேடினாலும், கிடைப்பதற்கு அரிதான பொக்கிஷம் தான், கோடியில் ஒருவரான மோடி; இவர், நம் பாரத தேசத்திற்கு, இறைவன் அருளிய கொடை!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *