வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால்: மத்தியபிரதேச மாநிலம் போபாலில் அக்டோபர் 2ம் தேதி நடைபெற இருந்த “இண்டியா” கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்தியபிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.

லோக்சபாவுக்கு, அடுத்தாண்டு மத்தியில் தேர்தல் நடக்க உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக, 28 எதிர்க்கட்சிகள் அடங்கிய, ‘இண்டியா’ கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் புதுடில்லி வீட்டில் நடந்தது. இதில், 12 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சிகளின், ‘இண்டியா’ கூட்டணி சார்பில், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை ஆகிய பிரச்னைகளை முன்வைத்து, கூட்டாக பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மத்திய பிரதேசத்தின் போபாலில் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் இதை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலம் போபாலில் அக்டோபர் 2ம் தேதி நடைபெற இருந்த “இண்டியா” கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.
மேலும் கமல்நாத் கூறியதாவது: சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களை திசை திருப்ப பாஜ., முயற்சிக்கிறது. 2019ம் ஆண்டு தேர்தலில் தேசபக்தியும், சர்ஜிக்கல் ஸ்டிரைக்யும் ஞாபகம் இருக்கிறதா. விவாதத்தை தவிர்க்க முக்கிய பிரச்சனைகளில் பாஜ., வரும் மூன்று மாதங்களில் திசை திருப்பும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement