
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கிடாய் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்வா என்ற குள்ள விஷ்வா. இவர் மீது நான்கு கொலை வழக்குகள் உள்பட 16 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் இவர் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த போது, சுங்குவார்சத்திரம் அருகே சோகண்டி என்ற இடத்தில் காவல் துறையினரை கண்டதும் அவர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற போது, தற்காப்புக்காக என்கவுண்டரில் விஸ்வாவை சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து காஞ்சிபுரம் எஸ்.பி. சுதாகர் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.