இந்தியாவில் ஆன்லைன் மோசடி நிகழ்வுகள் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகின்றன. எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் படித்தவர்களே கூட இதில் ஏமாறுவதுதான் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. அதிலும் ஆன்லைன் மற்றும் தொழில்நுட்பம் குறித்து நன்கு அறிந்திருக்கும் மென்பொருள் பொறியாளர்களும் கூட ஏமாறத்தான் செய்கின்றனர். கடின உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்தை ஓரிரு நொடிகளில் அல்லது நாட்களில் இழந்து விடுகின்றனர்.

இதுபோன்ற மோசடிகளுக்கு இரையாகாமல் இருக்க வேண்டும் என்றால், முன்பின் தெரியாத நபர்களை அவ்வளவு எளிதில் நம்பிவிட கூடாது. இணையத்தில் புதிதாக அறிமுகம் செய்யும் நபர்களிடம் அவர்களுடைய பின்புலத்தை ஆராயாமல் வங்கி தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது.

அதிலும் அவர்கள் முதலீடு செய்வது தொடர்பாக ஏதேனும் யோசனைகளை தெரிவித்தால், அதுகுறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக லாபம் தருவதாகக் கூறுவதை நம்பி பணத்தை முதலீடு செய்தால் பெரும் ஏமாற்றமே மிஞ்சும் என்பதே யதார்த்தமாக உள்ளது.

குஜராத் மாநிலம் அஹமதாபாதை சேர்ந்த மென்பொருள் பொறியாளரின் வாழ்விலும் இத்தகைய மோசடி அண்மையில் அரங்கேறியுள்ளது. மேட்ரிமோனியல் தளத்தில் அறிமுகமான பெண்ணின் ஆலோசனையை கேட்டு, கிரிப்டோகரன்சியில் ரூ.1 கோடி பணத்தை இவர் முதலீடு செய்திருக்கிறார். ஆனால், அந்தப் பெண் லாவகமாக மோசடியை செய்துவிட்டு, தொடர்புகளை துண்டித்துக் கொண்ட நிலையில், இவர் பணத்தை இழந்துவிட்டு நிற்கிறார்.

மேட்ரிமோனியல் தளம் மூலம் பெண் அறிமுகம் : 

அஹமதாபாதின் காந்திநகர் பகுதியில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர் குல்தீப் படேல். இவர் கடந்த 9ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். கடந்த ஜூன் மாதம் மேட்ரிமோனியல் தளத்தில் அதிதீ என்ற பெண் அறிமுகம் ஆனதாகவும், அவர் தன்னை பிரிட்டனில் இருந்தபடி இறக்குமதி, ஏற்றுமதி தொழில்களை கவனித்து வருவதாக அறிமுகம் செய்து கொண்டதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read : லால்பக்சா ராஜாவின் ஃபர்ஸ்ட் லுக்.. மும்பையில் களைகட்டத் தொடங்கியது கணேஷ் உத்சவம்!

Banocoin என்ற பெயரில் கிரிப்டோகரன்சி இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் வாடிக்கையாளர் உதவி மைய பணியாளர் போன்ற ஒருவர் மூலமாக அந்தப் பெண் பேச வைத்துள்ளார். இதை நம்பி முதலில் ரூ.1 லட்சம் முதலீடு செய்த குல்தீப் படேலின் கிரிப்டோ அக்கவுண்டில் கூடுதலாக 78 டாலர் வரவு வைக்கப்பட்டிருந்தது. இதைடுத்து, 18 பரிவர்த்தனைகள் மூலமாக ரூ.1 கோடி வரையிலான பணத்தை அவர் முதலீடு செய்தார். மேலும், செப்டம்பர் 3ஆம் தேதி தன்னுடைய கிரிப்டோ அக்கவுண்டில் இருந்து ரூ.2.59 லட்சம் பணத்தை எடுப்பதற்கு அவர் முயற்சி செய்தபோது அக்கவுண்ட் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வாடிக்கையாளர் சேவை மைய போலி பணியாளரை குல்தீப் தொடர்பு கொண்டபோது, அக்கவுண்டை விடுவிக்க ரூ.35 லட்சம் செலுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். அதிதீயை தொடர்பு கொள முயற்சித்தும் பலனில்லை. அப்போதுதான் தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதையே குல்தீப் படேல் உணர்ந்துள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *