சேலம்:
சேலம் ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சேலம் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.. நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற பதவி பறிக்கப்பட்டு,இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த ஒன்றாம் தேதி முதல் நாள் தோறும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
-பேட்டி பாஸ்கரன் மாவட்ட தலைவர்