மதுரை:
மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே உள்ள குண்ணத்தூரைச் சேர்ந்தவர் குருநாதன்(35). கொத்தனரான இவருக்கு தேசிங்குராஜ்(25) என்பவர் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார்.
இதனிடையே குருநாதனின் மனைவி சித்ராவிற்கும், தேசிங்குராஜிற்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அவர்கள் இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்தனர்.
அப்போது திடீரென அங்கு வந்த குருநாதன் அவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் அவர் ஆத்திரத்தில் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து டி. கல்லுப்பட்டி போலீசார் குருநாதனை கைது செய்தனர்.