’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வரும் ஏப்ரல்.28ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் முழு வீச்சில் ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் பாகங்களுக்கான பி எஸ் ஆந்தம் பாடல் இன்று மாலை வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மையக்கருவை விளக்கும் வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது.

நபைலா மான் இணைந்து பாடியுள்ள நிலையில், நீரவ் ஷா படம் பிடித்துள்ளார்.  ஷாத் அலி இயக்கியுள்ளார். பிருந்தா நடனம் அமைத்துள்ளார்.

வாளை சுழற்றி அரியணையில் அமர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இந்த வீடியோவில் நடித்து பாடியுள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் உற்சாகத்துடன் இந்தப் பாடலை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

முன்னதாக பொன்னியின் செல்வன் படத்தின் சிவோஹம், வீர ராஜ வீரா, அகநக பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

மேலும், இன்று சென்னையில் தொடங்கி நாளை கோவை, மீண்டும் நாளை மறுநாள் சென்னை, தொடர்ந்து டெல்லி, கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, திருச்சி, சென்னை என தொடர்ந்து ப்ரொமோஷன் பணிகள் நடைபெற உள்ளன.

முன்னதாக பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, சென்ற மார்ச் 29 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார். அமைச்சர் துரைமுருகன், நடிகர் சிலம்பரசன், இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆகியோரும்  கலந்து கொண்டனர்.

இந்த இசை வெளியீட்டு விழா தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. மேலும் பொன்னியின் செல்வன்  2 ஆம் பாகம் ரிலீசுக்கு முன்னால் முதல் பாகத்தை ரீ-ரிலீஸ் செய்யவும் படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேசமயம் படமானது தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4dx தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் நாம் திரையில் காணும் காட்சிகளின் உணர்வுகளை நாம் இருக்கையில் அமர்ந்தபடி உணர முடியும்.ஏற்கனவே பொன்னியில் செல்வன் படத்தின் முதல் பாகம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ஷோபிதா, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர், ரகுமான், கிஷோர்  என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் பட பாகங்களை மணிரத்னம் இயக்கியுள்ளார்.

மேலும் படிக்க: Simran on Monal: ‘உன்னை மிஸ் பண்றோம் மோனு..’ தங்கை நினைவால் தவிக்கும் சிம்ரன்! நடிகை மோனலின் 21ம் ஆண்டு நினைவு நாள்..!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: