புதுச்சேரி,-குருசுக்குப்பம் என்.கே.சி., அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த முகாமை, அமைச்சர் லட்சுமி நாராயணன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
முகாமில் பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண் சிகிச்சை, குழந்தைகள், அறுவை சிகிச்சை, மகப்பேறு, எலும்பு, தோல் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், பங்கேற்ற பொதுமக்களை, பிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து, உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கியதோடு, இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
முகாமில், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Advertisement
