‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்காக ‘பொன்னியின் செல்வன் ஆந்த்தம்’ என்ற தனிப் பாடல் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார். இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்துத் தயாரித்திருந்த இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் உட்பட பலர் நடித்துள்ளனர்.