
கோப்புப்படம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மீன்பிடித் தடை காலம் இன்று(சனிக்கிழமை) அமலுக்கு வந்தது.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன் கீழ், தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மற்றும் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்குடனும், மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டு இன்று (ஏப்ரல் 15) முதல் ஜூன் 14 வரையிலான நாள்களுக்கு, பாரம்பரிய மீன்பிடிக் கலன்கள் நீங்கலாக விசைப்படகுகள், மற்றும் இழுவைப் படகுகள் கொண்டு கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதித்து அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மீன்பிடித் தடை காலம் இன்று(சனிக்கிழமை) அமலுக்கு வந்தது. அறிவிப்பினை மீறி மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகள் மீது, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் (1983) கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.