Bizarre News: திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதை கூறியது யாரென்று தெரியவில்லை. ஆனால் “தவறான புரிதல்” என்பது ஜோடிகளிடம் பரஸ்பரமாக காணப்படுவது உண்மைதான். கணவன்-மனைவி இடையே வரும் கருத்து வேறுபாடு, சண்டை, வாதம் செய்வதும் இயல்பானது தான்.

சிறுநீர் இடைவேளை

சில சமயங்களில் ஒரு காரணமே இல்லாமல், ஒருவரின் பிறந்த நாள் அல்லது அவர்களின் திருமண நாளை மறந்துவிடுவார்கள். ஆனால், தாய்லாந்தில் ஒருவர் இன்னும் தீவிரமாக, தனது மனைவியை ஏற்றிக்கொள்ளாமல் பல கி.மீட்டர் வாகனம் ஓட்டிய சம்பவம் நடந்துள்ளது. 

கணவர் பூன்டோம் சாய்மூன் (55), மனைவி அம்னுவாய் (49) ஆகியோர் கடந்த 27 ஆண்டுகளாக திருமண உறவில் இருக்கின்றனர். அவர்கள் தாய்லாந்தின் மகா சராகாம் மாணகத்தில், அதிகாலை 3 மணியளவில் சாலையில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கணவர் கழிக்க வேண்டும் என வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கியுள்ளார். அப்போது, அவரின் மனைவிக்கும் சிறுநீர் கழிக்க வேண்டும் என உணர்வு எழுந்துள்ளது. எனவே, அவரும் காரை விட்டு இறங்கியுள்ளார். 

மனைவியை மறந்த கணவர்

மேலும் படிக்க | ஆஹா! காதலுக்கான சிறந்த செண்ட்… ஆண்களை மயங்க வைக்கும் அழகியின் வியர்வை

சாலையின் ஓரத்திலேயே கணவர் சிறுநீர் கழிக்க, மனைவியோ அருகில் இருந்த மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதி பக்கம் சென்றுள்ளார். இதையடுத்து, மனைவி வாகனத்தில் இருந்து கீழே இறங்கியது தெரியாமல், சிறுநீர் கழித்துவிட்டு வந்த கணவர் வாகனத்தை எடுத்துள்ளார். அவர் மனைவி இல்லாததை கவனிக்காமல் சுமார் 160 கி.மீ., தூரத்திற்கு பயணித்துள்ளார். நீண்டநேரம் அமைதியாக இருந்ததால், மனைவி பின்சீட்டில் நிம்மதியாக தூங்கிவிட்டார் என நினைத்துள்ளார். 

நடுரோட்டில் மனைவி

மறுபுறம், மனைவியோ காட்டுப்பகுதியில் இருந்து சாலைக்கு வந்தபோது, காரும், கணவரும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மனைவியின் மொபைல் போனும் காரின் உள்ளேயே இருந்துள்ளதால், அவரால் கணவரை அழைக்க இயலவில்லை. சாலையில் ஆட்நடமாட்டம் குறைவகா இருந்ததால், பயத்தில் தொடர்ந்து நடக்க தொடங்கியுள்ளார். இதையடுத்து, சுமார் 20 கி.மீ., தூரம் நடந்தே சென்றபோது, அதிகாலை 5 மணியளவில் அங்கு உள்ளூர் காவல் நிலையத்தை பார்த்துள்ளார். 

மௌனம் காத்த மனைவி

அவரின் கணவரின் மொபைல் நம்பர் நினைவில் இல்லாததால், தனது மொபைலுக்கு சுமார் 20 முறைக்கும் மேல் அழைத்துள்ளார். ஆனால், அவரின் கணவர் மொபைல் போனை எடுக்கவில்லை. சுமார் 8 மணியளவில், கணவரை காவல் துறையினர் தொடர்புகொண்டனர். சுமார் 150 கி.மீ., தூரத்தை தாண்டிய பின், மீண்டும் வண்டியை திருப்பி சென்றுள்ளார். 

காவல் நிலையம் வந்த கணவர், அவரின் மனைவியிடம் தொடர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், ஆச்சரியம் அளிக்கும் வகையில், மனைவி அவரை ஒன்றே கூறாமல் சென்றுவிட்டார். 27 ஆண்டுகள் திருமணமான ஒரு ஜோடி ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும் என புரியவில்லை என பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

மேலும் படிக்க | பாவங்களை போக்கி அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் தாய்லாந்து சோங்க்ரான் நீர் திருவிழா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: