சமீபத்தில் சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் நடுவர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார் அஸ்வினுக்கு 25 சதவீதம் அபராதம் எதிர்த்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராஜஸ்தான் போட்டி விறுவிறுப்பாக நடந்த நிலையில் இந்த போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடிக்க முடியாததால் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்த போட்டியில் நடுவில் நடுவர் தன்னிச்சையாக பந்தை மாற்றினார். இதற்கு அஸ்வின் நாங்கள் பந்தை மாற்ற சொல்லவில்லை என கேட்டபோது நடுவர்கள் பந்தை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தால் மாற்றலாம் என்று நடுவர் விளக்கம் கூறியுள்ளார்.

இந்நிலையில் போட்டி முடிந்தவுடன் பேட்டி அளித்த அஸ்வின் ’பந்தின் தன்மை ஈரப்பதமாக இருப்பதாக கூறி நடுவர் தானாகவே எங்களுக்கு வேறொரு பந்தை கொடுத்தார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது, இதற்கு முன் ஐபிஎல் போட்டிகளில் இதுவரை நடந்ததே இல்லை, என்னால் இதை புரிந்து கொள்ளவே முடியவில்லை, ஈரப்பதம் காரணமாக பந்தை மாற்றிக் கொள்ளலாம் என்றால் ஒவ்வொரு ஓவரிலும் ஈரப்பதத்தை காரணம் காட்டி மாற்றிக் கொள்ள முடியுமா? ஐபிஎல் தரம் குறையாமல் நடந்து கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

நடுவரின் முடிவை அஸ்வின் பொதுவெளியில் இவ்வாறு பேட்டி கொடுத்ததை அடுத்து பிசிசிஐ விதியின் படி அவருக்கு 25% அபராதம் விதித்து, எச்சரிக்கையும் விடப்பட்டது. மீண்டும் அதே போல் அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அவர் தடை செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *