Tamilnadu

oi-Hemavandhana

Google Oneindia Tamil News

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஸ்கேன் சென்டரில் நடந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளதுடன், அதுதொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் ஷேர் ஆகிவருகிறது.. என்ன காரணம்?

மயிலாடுதுறை நகர விரிவாக்க பகுதியில் வணிக வளாகம் ஒன்று உள்ளது.. இந்த வணிக வளாகத்தில் ஸ்கேன் சென்டரில் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.. இங்கு ஸ்கேன் எடுப்பதற்காக 5 மாத கர்ப்பிணி ஒருவர் வந்துள்ளார்..

அங்கிருந்த மாடிப்படியில் சிறிது நேரம் அவர் உட்கார்ந்துள்ளார்.. அந்த நேரம் பார்த்து, அப்பெண்ணின் கணவர் அங்கு வந்து, அவரை சரமாரியாக திட்ட ஆரம்பித்தார்..

 Did husband attack pregnant wife and what happened in Mayiladuthurai scan centre

கர்ப்பிணி கதறல்: ஆவேசமாக திட்டிக் கொண்டே இருந்தவர், பிறகு திடீரென பெண்ணை, சரமாரியாக தாக்க துவங்கினார்.. கர்ப்பிணி என்றும் பாராமல், அவரது தலைமுடியை இழுத்து பிடித்து அடித்துள்ளார்.. அப்போதும் ஆத்திரம் தீராமல், மாடிப்படியில் உட்கார்ந்திருந்த கர்ப்பிணியை, வயிற்றில் ஓங்கி எட்டி உதைத்தார்.. இதை அங்கிருந்தவர்கள் கண்டு பதறிப்போனார்கள்.. அந்த பெண் வலியால் அலறி துடிக்க, அந்த இளைஞரோ, மனைவியை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்..

வலி அதிகமாகிவிடவும், கர்ப்பிணி பெண் கீழே விழுந்து கதறி அழுதார்.. இதனால் அங்கிருந்த அனைவருமே ஒன்று திரண்டு ஓடிவந்தனர்.. ஆனால், கண்ணீர் விட்டு கதறியதால், அந்த பெண் மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டார்.. உடனடியாக அவரை மீட்டு, மயிலாடுதுறை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அங்கு அவருக்கு தீவிரமான சிகிச்சை தரப்பட்டது.. பிறகு, அவரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.. அவரது பெயர் சுபா… சீர்காழி தென்பகுதியை சேர்ந்தவராம்.. கணவர் பெயர் விஜய்.. இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.

 Did husband attack pregnant wife and what happened in Mayiladuthurai scan centre

மிஸ்ஸிங் சுபா: இதனிடையே, சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுபாவை திடீரென காணவில்லை.. இதனால் அங்கிருந்த மற்ற நோயாளிகளும், உறவினர்களும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஊழியர்களும் பதறிப்போனார்கள்.. கர்ப்பிணிக்கு மறுபடியும் பிரச்சனை வந்துவிட்டதோ? எங்கே போயிருப்பார்? என்று தேட ஆரம்பித்தனர்.. அப்போதுதான், அந்த மருத்துவமனையின் இருட்டு பகுதியில் ஒரு இளைஞருடன் கர்ப்பிணி சுபா நெருக்கமாக உட்கார்ந்திருப்பதை கண்டனர்.. அப்போது, அந்த இளைஞர் சுபாவுக்கு முத்தம் தந்து கொண்டிருப்பதை பார்த்து பதறிப்போய் அருகில் சென்றனர்..

பிறகுதான், அந்த இளைஞர், அவரது கணவர் விஜய் என்பது தெரியவந்தது… இதனால், ஒட்டுமொத்த பேரும் மேலும் கொந்தளித்தனர்.. வந்திருப்பது கணவர்தான் என்பது அறிந்ததுமே ஆக்ரோஷமானார்கள்.. கர்ப்பிணி என்றும் பாராமல் வயிற்றில் எட்டி உதைத்தது குறித்து, விஜய்யிடம் கேள்வி எழுப்பினார்கள்.. அப்போது சுபா குறுக்கிட்டு, தங்களுக்குள் தகராறு வந்துவிட்டதால் அப்படி கோபமாக நடந்து கொண்டதாகவும், மனம்மாறி வந்து, தன்னை சமாதானப்படுத்துவதற்காகவே இப்போதுவந்திருக்கிறார் என்றும் சமாளித்தார்..

 Did husband attack pregnant wife and what happened in Mayiladuthurai scan centre

விஜய் முத்தம் : அப்போதும்கூட, சிலர் மனசு கேட்காமல், விஜய்யை திட்டியிருக்கிறார்கள்.. அதற்கு சுபா, “நீங்கள் உங்க வேலையை பார்த்துக் கொண்டு போங்க, எல்லாம் எங்களுக்கு தெரியும்” என்று கணவருக்கு சப்போர்ட் செய்துள்ளார்.. இதனால் பரிந்துபேச வந்தவர்கள், நொந்துகொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்கள்.. இதில் ஹைலைட் என்னவென்றால், கர்ப்பிணியை கணவர் எட்டி உதைத்து வலியால் துடித்ததுமே, சிலர் போலீசுக்கு சென்று புகாரும் தந்துவிட்டனர்..

ஆனால், விஜய் தந்த ஒரே முத்தத்தால், சுபா கூல் ஆனதையும், தட்டிக்கேட்க வந்தவர்களிடம் தடாலடி கேள்வியை கேட்டு சுபா அந்தர் பல்டி அடித்ததால், போலீசார் எதுவுமே வழக்கு பதிவு செய்யவில்லை.. எனினும் கிளினிக்கில் சுபா கீழே விழுந்து கதறிய காட்சியும், ஆஸ்பத்திரியில் இருட்டு பகுதியில் நடந்த சம்பவமும், இணையத்தில் வீடியோவாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 யாருனு பாருங்க.. அத்தனை பேர் சுற்றி நிற்க.. நடுவிலே நின்று.. அட மாரியம்மா.. நடுநடுவே யாருனு பாருங்க.. அத்தனை பேர் சுற்றி நிற்க.. நடுவிலே நின்று.. அட மாரியம்மா.. நடுநடுவே

English summary

Did husband attack pregnant wife and what happened in Mayiladuthurai scan centre

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *