வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி; காலநிலை மாற்றத்தை மாநாட்டு மேசைகளில் இருந்து மட்டும் எதிர்த்துப் போராட முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் இரவு உணவு மேஜைகளில் இருந்து போரடும் போது அது வெகுஜன இயக்கமாக மாறும் என பிரதமர் மோடி பேசினார்.

latest tamil news

காலநிலை மாற்றத்தை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்ற கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது: பருவ கால மாற்றத்தை சமாளிக்க இந்தியா வழிக்காட்டுகிறது. பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதில் ஒரு சக்தி வாய்ந்த வழியாக நமது அன்றாட பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்துவதில் உள்ளது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அந்த நல்ல பழக்க வழக்கங்கள் துவங்க வேண்டும்.

தூய்மை:

காலநிலை மாற்றத்தை மாநாட்டு மேசைகளில் இருந்து மட்டும் எதிர்த்துப் போராட முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் இரவு உணவு மேஜைகளில் இருந்து போரடும் போது அது வெகுஜன இயக்கமாக மாறும். கடந்த சில ஆண்டுகளில் இந்திய மக்கள் நிறைய விஷயங்களை செய்து உள்ளனர். பெரிய அளவிலான தூய்மை இயக்கம், கடற்கரை பகுதிகளை தூய்மை செய்வது அல்லது சாலைகளை துப்புரவுப்படுத்துவது உள்ளிட்டவற்றை மக்கள் மேற்கொண்டனர்.

மிஷன் லைப்

பொது இடங்களில் கழிவுகள் இல்லாத படி மக்கள் உறுதி செய்து வருகின்றனர். இந்தியாவின் பல பகுதிகளில் பாலின விகிதங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் கூட மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மிஷன் லைப் என்பது, பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் ஒரு அமைப்பு ஆகும். அவர்களின் சிறிய பழக்க வழக்க மாற்றங்கள் எப்படி சக்திவாய்ந்தவை என்று உணர்ந்து அவர்களின் நடவடிக்கைகள் சுற்றுச்சூழலை பாதுகாக்க எவ்வாறு உதவும் என்று அவர்கள் தெரிந்து கொண்டு தங்கள் பழக்கங்களை மாற்றிக்கொள்வார்கள்.

latest tamil news

இயற்கை விவசாயம்

எல்.இ.டி. விளக்குகளுக்கு மக்கள் மாறியதும் ஒரு வெற்றி. இயற்கை விவசாயம் அல்லது தினைகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ‘சிறு, சிறு நீர்த்திவளைகள் ஒன்று சேரும் போது பானையை நிரப்ப முடியும் ‘, அதேபோல் இந்த பூமியை காத்திட நாம் எடுக்கும் ஒட்டுமொத்த நல்ல முடிவுகள் மிகுந்த பலனை தரும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement


Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: