சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் உள்ள அவரது குல தெய்வ கோயிலான கருமாத்தூர் ஒச்சாண்டம்மன், பொன்னாங்கன் கோயிலில் நேற்று பொங்கல் வைத்து தனது புதிய படத்திற்கான பூஜை செய்து படப்பிடிப்பை துவங்கினார். மனோஜ் கிரியேசன்ஸ் தயாரிப்பில், படத்திற்கு தாய்மெய் என பெயரிடப்பட்டுள்ளதாகவும், தானே நாயகனாகவும், புதுமுக நடிகை மஹானா-வை அறிமுகம் செய்துள்ளார். பவதாரணி இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நடிப்பது வேறு இயக்குவது வேறு படம் இயக்காமல் இருந்தது ஏக்கத்தை தந்தது அதனால் மீண்டும் இயக்குகிறேன் – நீண்ட இடைவெளிக்கு பின் தான் இயக்கும் தாய்மெய் என்ற புதிய படத்தின் பூஜையை உசிலம்பட்டி அருகே தனது குல தெய்வ கோவிலில் துவங்கிய இயக்குநர் இமயம் பாரதிராஜா பேட்டி.#madurai #usilampatti pic.twitter.com/7FPu3Kvhzx

— arunchinna (@arunreporter92) April 14, 2023

இந்த திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் இமயம் பாரதிராஜா, “நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு படத்தை இயக்க உள்ளேன், 6 ஆண்டுகளில் என்னை நடிக்க அழைத்தார்கள், 1964 ல் ஒரு நடிகனாக வேண்டும் என திரை உலகத்திற்கு வந்தேன் அந்த வாய்ப்பு 84 வயதில் தான் கிடைத்தது அதனால் சில படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறேன்., என்ன தான் இருந்தாலும் இயக்குவதில் இருக்கும் பலம், சக்தி நடிப்பதில் கிடைக்காகது, நடிப்பது வேறு இயக்குவது வேறு, நீண்ட காலம் இயக்காமல் இந்தது ஒரு ஏக்கத்தை தந்தது, அதனால் இப்படி ஒரு படத்தை ஆரம்பித்துள்ளேன்” என பேசினார்.

மேலும், ”படத்திற்கு தாய்மெய் என்ற தாய் உண்மையானவள் என்ற தலைப்பு, ஒரு தாய் எப்படி பட்டவள் என்பதை சொல்லியுள்ளேன், என் மண் கருமாத்தூரில் துவங்கியுள்ள இப்படம் என் மண் சார்ந்த, என் மக்கள் சார்ந்த ஒரு படைப்பு எனவும், 25 நாட்களில் படம் முடியும் எனவும், முக்கிய கதாப்பாத்திரத்தில் நானும் நடிக்கிறேன், என்னையும், நாயகியாக அறிமுகம் ஆகும் மஹானா என்பவரையும் மூன்று கால கட்டத்தில் வாழ்வதை போல காணலாம், இதுவரை இல்லாத பாரதிராஜா போன்று இல்லாமல் வேறு ஒரு பாரதிராஜாவை பார்க்கலாம்” எனப் பேசினார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் – மதுரையில் வழிப்பறி புகாரில் சிக்கிய முன்னாள் பெண் காவல் ஆய்வாளர் டிஸ்மிஸ் – டிஐஜி பொன்னி உத்தரவு

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண