
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
திமுகவின் சட்டப்பேரவைத் தொகுதி பார்வையாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
திமுகவின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதி பார்வையாளர்களுடன் பேசி வருகிறார்.
இந்த கூட்டத்தில் திமுக தொகுதி பார்வையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள், ஆலோசனைகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் அந்தந்த தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.