வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-ரயில் பெட்டிகளின் நுழைவு பகுதியிலும், ‘சிசிடிவி’ கேமரா பொருத்த, ரயில்வே திட்டமிட்டுள்ளது.
![]() |
ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
மொத்தமுள்ள 16 ரயில்வே மண்டலங்களில், 6,646 பெட்டிகளில் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில், மேற்கு ரயில்வேயில் அதிகபட்சமாக, 1,295 பெட்டிகள், தெற்கு ரயில்வேயில் 759 பெட்டிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே, ரயில் பெட்டிகளின் உள்பகுதியில் மட்டுமல்லாமல், பெட்டியின் நுழைவு வாயிலில், அதாவது இரு பக்கமும் உள்ள கதவு பகுதிகளில், கேமரா பொருத்த, ரயில்வே திட்டமிட்டுஉள்ளது.
இது தொடர்பாக, ரயில்வே அதி
![]() |
காரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த கேமராக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது, வெளி பகுதிகளில் இருந்து கல் வீச்சு போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.
மேலும், பெட்டியில் யாரெல்லாம் ஏறி, இறங்குகின்றனர் என்பதையும் அடையாளம் காண முடியும். எத்தனை உடைமைகளை எடுத்து வந்தனர் என்பதையும் கண்டறிய முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement