கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் ஒருவர் மூன்று ஆண்டுகள் மட்டுமே தலைவர் பதவியில் வகிக்க முடியும் என்பதால், கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் அழகிரியின் பதவி காலம் முடிந்து விட்டது.

மல்லிகார்ஜுன கார்கே

இதையடுத்து புதிய தலைவரை நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்தது. ஆனால் அப்போது காங்கிரஸில் கடுமையான குழப்பம் நீடித்தது. இதனால் அதை சரிக்கட்டும் முயற்சிகள் மட்டுமே நடந்தது. அது அழகிரிக்கு நிம்மதியை கொடுத்தது. இதற்கிடையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக கார்கே பதவி ஏற்றுக்கொண்டார்.

பிறகு ஒவ்வொரு மாநிலமாக கட்சியை பலப்படுத்தும் பணிகளை அவர் தொடங்கினார். அந்த நேரத்தில் தமிழகத்திற்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான பணிகளும் வேகமெடுத்தது. இதையடுத்து பலரும் அந்த பதவிக்கு முயற்சி செய்ய தொடங்கினார்கள்.

சத்தியமூர்த்தி பவன் – காங்கிரஸ்

பதிலுக்கு அழகிரியும் தனது பதவியை தக்கவைத்துக்கொள்ள தேவையான அனைத்து வேலைகளையும் செய்தார். இது சத்தியமூர்த்தி பவனில் பெரும் களேபரத்தையே ஏற்படுத்தியது. அழகிரி ஆதரவாளர்களுக்கும் ரூபி மனோகரன் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டையால் தாக்கிக்கொண்டனர். இதில் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதற்கு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ரூபி தீவிரமாக முயற்சி மேற்கொண்டதாகவும், அதற்கு தனது ஆதரவாளர்கள் மூலம் அழகிரி பதிலடி கொடுத்ததாகவும் அப்போது பேசப்பட்டது.

பாரத் ஜோடோ யாத்திரை

பிறகு ஒருவரை ஒருவர் கட்சி தலைமையிடம் சென்று புகார் கொடுத்தனர். கடுப்பான தலைமை அனைவரையும் எச்சரித்து அனுப்பிவைத்தது. மேலும் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கியதால், மீண்டும் புதிய தலைவரை நியமிப்பதற்கான பணிகள் சுணக்கமடைந்தது. ஒருவழியாக புதிய தலைவரை நியமிப்பதற்கான வேலை மீண்டும் சூடு பிடித்திருக்கிறது.

இதையடுத்து பலரும் அந்த பதவிக்கு தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள். குறிப்பாக ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், செல்லகுமார், ரூபி மனோகரன், செல்வப்பெருந்தகை ஆகிய 5 பேருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. பதிலுக்கு அழகிரியும் தனது பதவியை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக தான் தற்போது டெல்லிக்கு சென்றிருக்கிறார். இந்த பயணம் அவருக்கு கைகொடுக்குமா என்ற கேள்வி எழுகிறது.

கே.எஸ்.அழகிரி

இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர், “கட்சி தலைமை கே.எஸ்.அழகிரி மீது அதிருப்தியில் இருக்கிறது. எனவே அவரை மாற்ற வேண்டும் என முடிவு செய்து விட்டது. அவரிடமும் இதுகுறித்து தெரிவித்துவிட்டார்கள். ஆனால் அவர் தனது மகளுக்கு திருமணம் வைத்திருப்பதால், அதுவரை தலைவர் பதவியில் இருந்து கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து தான் அந்த வேலைகள் கிடப்பில் போடப்பட்டது. மேலும் நாடுளுமன்ற முடக்கம், அதானி விவகாரம் வந்ததால் அழகிரியும் நிம்மதியாக இருந்தார். இதற்கிடையில் தான் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வந்தது. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை காட்டினார்.

ஆனால் தமிழகத்தில் கே.எஸ்.அழகிரி பெரிய அளவில் எந்த ஆர்பாட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. அப்படியே விட்டிருந்தாலும் பரவாயில்லை. மூன்று பேருடன் அவர் நடத்திய ரயில் மறியல் போராட்டம் விமர்சனத்துக்குள்ளானது. பலரும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்று பேச ஆரம்பித்துவிட்டனர்.

கே.எஸ்.அழகிரி ரயில் மறியல் போராட்டம்

இதுகுறித்த புகார் கட்சியின் தலைமைக்கும் அனுப்பப்பட்டது. இது தனக்கு சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று உணர்ந்த அழகிரி, தற்போது டெல்லிக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார். அங்கு சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்தித்து வரும் 25-ம் தேதி நடக்கும் தனது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்கிறார்.

அப்போது தனது தலைவர் பதவியை நீட்டிக்கும் படியும் கோரிக்கை வைக்கவிருக்கிறார். மறுபுறம் கட்சி தலைமை புதிய தலைவரை நியமிப்பதில் உறுதியாக இருக்கிறது. எனவே அவருக்கு இந்த பயணம் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்றனர் விரிவாக.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: