புதுச்சேரி : கெங்ராம்பாளையம் ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் 25ம் ஆண்டு விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது.
கடலுார் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சிவா பங்கேற்று பேசினார். கல்லுாரி தலைவர் ராஜா, செயலாளர் சிவராம் ஆல்வா, பொருளாளர் விமல், அறங்காவலர்கள் முகமது இலியாஸ், சிந்து முன்னிலை வகித்தனர்.
முதல்வர் மகேந்திரன், துணை முதலவர் மற்றும் கல்வி புலத்தலைவர் மெடில்டா, துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியர் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கல்லுாரி ஒருங்கிணைப்பாளர்கள் பிராபகரன், சுகன்யா, உடற்கல்வி ஆசிரியர் பிரேம் ஆகியோர் செய்திருந்தனர்.
Advertisement
