சென்னை: பெப்சி என்று அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்ந்தெடுக்கப்படுவார்கள். தற்போது ஆர்.கே.செல்வமணி தலைமையிலான நிர்வாகிகளின் பதவி காலம் நிறைவடைகிறது. இதனால் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல், வருகிற 23ம்தேதி சென்னை வடபழனியில் உள்ள சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
இதில் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு சுவாமிநாதன், பொருளாளர் பதவிக்கு செந்தில்குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இவர்களை எதிர்த்து வேறுயாரும் மனுதாக்கல் செய்யாததால் இவர்கள் மூவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். மற்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் 23ம் தேதி நடக்கிறது.
The post பெப்சி தலைவராக செல்வமணி மீண்டும் தேர்வு appeared first on Kollywood News | Kollywood Images – Cinema.dinakaran.com.