வரலாறு காணாத வகையில் மேற்கு ஆஸ்திரேலியாவை கடுமையான சூறாவளி தாக்கியிருக்கிறது. வெப்பமண்டல சூறாவளியான Ilsa ஐந்தாவது வகை புயலாக வலுவடைந்திருக்கிறது.

மலேசியாவில் பல அரசியல்வாதிகளை விபத்துக்குள்ளாக்கிய,1976-ம் ஆண்டு நடந்த நோமாட் விமான விபத்திற்கான காரணத்தை 47 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிட்டது அந்த நாடு.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியான அஷதா மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குதாரராக சுமார் 68.17 கோடி டிவிடெண்ட் (dividend) வருமானமாகப் பெறுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

புளோரிடாவின் ஆளுநரான Ron DeSantis, ஆறு வாரங்களுக்குப் பிறகு நிகழும் கருக்கலைப்புகளுக்குத் தடை விதிக்கும் மசோதாவில் கையெழுத்திட்டார்.

அடுத்த பத்து வருடங்களில் கோவிட் தொற்றைப் போன்ற உயிர் கொல்லும் தொற்று பரவ 27.5 சதவிகிதம் வாய்ப்புகள் இருப்பதாக லண்டனை மையமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான ஆர்ஃபினிட்டிவ் லிமிடெட் தெரிவித்திருக்கிறது.

பிரிட்டனின் டோரி கவுன்சிலர் ஆண்ட்ரூ எட்வர்ட்ஸ் (Andrew Edwards) , “அனைத்து வெள்ளை இனத்தவரும் ஒரு கறுப்பின அடிமையை வைத்திருக்க வேண்டும்” என்று சர்ச்சையான இனவெறி கருத்தை முன் வைத்திருக்கிறார். அதையடுத்து, அவரை விசாரணை செய்து வருகின்றனர்.

உக்ரைன் போர் பற்றி தவறானத் தகவல்களைத் தெரிவித்ததாக ரஷ்யா நீதிமன்றம், விக்கிப்பீடியாவின் மீது இரண்டு மில்லியன் ரூபிள்களை அபராதமாக விதித்தது.

பெய்ஜிங் பேச்சுவார்த்தையின்போது, சீனாவில் உள்ள மனித உரிமை மீறல்கள் பற்றிய கருத்துகளைத் தெரிவித்ததாக ஜெர்மன் அமைச்சர் Annalena Baerbock கூறினார்.

Southfork Dairy Farms என்ற டெக்ஸாஸை மையமாகக் கொண்ட பண்ணையில் நடந்த தீ விபத்தில், சுமார் 18,000 மாடுகள் உயிரிழந்தன. தீ விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: