பெரும் உச்சத்திலிருந்து சரிவின் அடி ஆழத்தை பார்த்துவிட்டவரை ஆஷிஸ் நெஹ்ரா குஜராத் அணியின் நெட் பௌலராக அழைத்திருக்கிறார். கடந்த சீசன் முழுவதும் குஜராத்தின் நெட் பௌலராக இருந்தவரை மினி ஏலத்தில் குஜராத் அணியே அடிப்படை விலைக்கு வாங்கிப் போட்டது. வாய்ப்பு கிடைக்குமா என பரிதவிப்புடன் பென்ச்சில் காத்துக் கொண்டிருந்தவருக்கு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைத்தது.

இந்தப் போட்டி மொஹாலியில் நடந்திருந்தது. ஸ்லோயர் ஒன் ஸ்பெசலிஸ்ட்டான மோகித் சர்மாவுக்கு ஏற்ற பிட்ச் இது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட பணியை கச்சிதமாக செய்து முடித்துவிட்டார்.

வீசிய 24 பந்துகளில் பெரும்பாலானவை குட் லெந்த்தில் நல்ல டைட்டான லைனில் வீசப்பட்ட பந்துகள். இப்படி ஒரு பந்தில்தான் ஜித்தேஷ் சர்மா அவுட் ஆகியிருந்தார். பஞ்சாப் அணியே தட்டுத்தடுமாறி பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தது. ஜித்தேஷ் சர்மா கொஞ்சம் துடிப்பாக ஆடக்கூடியவர் என்பதால் அவர் சிறப்பாக ஆடி அணியை மீட்டிருப்பதற்கான வாய்ப்பு அமைந்திருக்கும். அதை மோகித் சர்மா நிகழவிடமால் செய்தார். அதேமாதிரி, கடைசிக்கட்டத்தில் அதிரடி காட்டத் தயாரான சாம் கரனையும் ஒரு ஷார்ட் பாலில் வீழ்த்தி பஞ்சாபை கட்டுப்படுத்த முக்கிய காரணமானார். அதற்காகத்தான் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

34 வயதில் கம்பேக் கொடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றபிறகு அவர் பேசியது,

வாய்ப்புகள் கிடைக்காதப்பட்சத்தில் முடங்கிப்போய் விடாமல் நமக்கான வாய்ப்புகளை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கான மிகச்சிறந்த உதாரணம் மோகித் சர்மா.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: