Washington

oi-Mani Singh S

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அதிக அளவிலான பெருந்தொற்றுக்கள் வரும் காலங்களில் அடிக்கடி வெளிப்படும் என்று Airfinity என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. பருவநிலை மாற்றம், சர்வதேச பயணங்கள் அதிகரிப்பு, அதிக மக்கள் தொகை, விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு தொற்று அதிகம் பரவுதல் ஆகிய காரணங்களால் அதிக அளவில் பெருந்தொற்றுக்கள் பரவலாம்.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிப்பட்ட கொரொனா உலகம் முழுவதும் ஆட்டி படைத்தது. பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்த கொரோனா கடுமையான பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தியது. உலகம் இந்த நூற்றாண்டில் கண்டிராத ஒரு பெரிய கொள்ளை நோயாக கொரோனா பெருந்தொற்று இருந்தது.

Pandemic are likely to emerge in the future as deadly and highly contagious, Says Report

தொற்று பரவல் கண்டறியப்பட்டு 4 ஆண்டுகள் நெருங்கிவிட்ட போதும் இன்னும் கூட கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் முழுமையாக அகலவில்லை. உருமாற்றம் அடைந்து பல அலைகளாக கொரோனா பரவி மீண்டும் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இருந்தாலும் தற்போது நோயின் தீவிரத்தன்மை குறைந்துவிட்டதால் கொரோனா எண்டமிக் நிலையை எட்டிவிட்டதாக மருத்துவ நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இது ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்பட்டாலும் அடுத்த 10 ஆண்டுகளில் மீண்டும் ஒரு பெருந்தொற்றை உலகம் காணப்போவதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக Airfinity என்ற அமைப்பு வெளியிட்டு இருக்கு அறிக்கையில், அதிக அளவிலான பெருந்தொற்றுக்கள் வரும் காலங்களில் அடிக்கடி வெளிப்படும். பருவநிலை மாற்றம், சர்வதேச பயணங்கள் அதிகரிப்பு, அதிக மக்கள் தொகை, விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு தொற்று அதிகம் பரவுதல் ஆகிய காரணங்களால் அதிக அளவில் பெருந்தொற்றுக்கள் பரவலாம்.

மறுபடியும் முதல்ல இருந்தா? 2வது 2500ஐ தண்டிய கொரொனா பாதிப்பு! மத்திய அரசு கொடுத்த முக்கிய எச்சரிக்கைமறுபடியும் முதல்ல இருந்தா? 2வது 2500ஐ தண்டிய கொரொனா பாதிப்பு! மத்திய அரசு கொடுத்த முக்கிய எச்சரிக்கை

எனவே, வைரஸ் பரவலை தடுப்பதற்காக உலக நாடுகள் தடுப்பூசிகளை துரிதமாக கண்டறிவது அவசியம் ஆகும். ஜிகா, மார்பர்க் போன்ற வைரஸ்களுக்கு இன்னும் கூட உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டறியவில்லை. திடீரென வெளிப்படும் இந்த நோய்களை கட்டுப்படுத்துவதற்கு உலக அளவில் வலுவான தொற்று நோய் தயார்நிலை அமைப்புகளை ஏற்படுத்துவதுதான் சிறந்த வழியாகும்.

கொரோனா மற்றும் அதுபோன்ற பெருந்தொற்றுக்களுக்கு உலக அளவில் ஒரு தயார் நிலையை அமைப்பை ஏற்படுத்துவதுதான் காப்பீடு போன்றதாக இருக்கும். உண்மையான அபாயங்களை நாங்கள் கணக்கிட்டு இருக்கிறோம். அதேபோல், அபாயங்களை குறைப்பதற்கான சாத்தியங்களையும் கணக்கிட்டு இருக்கிறோம். இது மக்களை பாதுகாக்க உதவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary

A report by Airfinity has warned that large-scale outbreaks will become more frequent in the coming years. Climate change, increased international travel, overpopulation, and increased animal-to-human transmission of infectious diseases may lead to increased outbreaks.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *