புதுச்சேரி : புதுச்சேரியில் கண்காணிப்பு கேமராக்கள் அரசு விரைவாக பொருத்த வேண்டும் என வெங்கடேசன் எம்.எல்.ஏ., (பா.ஜ) கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை :
புதுச்சேரியில் கஞ்சாவால் குற்ற சம்பவங்கள் நடக்கிறது. இதற்கு முடிவு கட்ட அமைச்சர் நமச்சிவாயம், காவல் துறை அதிகாரிகளுக்கு பல உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குற்றங்களை தடுக்கும் வகையில், இரவு நேர ரோந்தை புதுச்சேரி மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த வேண்டும். இந்த போலீசார் இரவில் சைரன் ஒளித்துகொண்டு வந்தால் குற்றவாளிகளுக்கு அச்சம் ஏற்படும். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது.
முக்கிய குற்றங்களை தடுக்க உறுதுணையாக இருக்கும் சி.சி.டி.வி., கேமராக்கள் பல சேதமாகியுள்ளது. இதைமாற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், நகரில் 180 இடங் களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதாக அமைச்சர் அறிவித்துள்ளார். விரைவில் இந்த இடங்களை அடையாளம் கண்டு, சி.சி.டி.வி., கேமராக்களை அரசு பொருத்த வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Advertisement
