அம்பேத்கர் ஜெயந்தி 2023 சிறப்பம்சம்: சமூக மறுமலர்ச்சியின் முன்னோடியும், சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியவருமான டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் (டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர்) அவர்களின் பிறந்தநாள் இன்று. டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் குறிப்பிடத்தக்க வாழ்க்கைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் ஜெயந்தி (Dr. B R Ambedkar Jayanti) என்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் மாமன்னன் அம்பேத்கரின் பிறந்தநாளை பீம் ஜெயந்தி அல்லது சமத்துவ தினம் என்றும் அழைக்கப்படுகிறது. அவர் ஒரு புகழ்பெற்ற பொருளாதார நிபுணர், அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி மற்றும் இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். எனவே இன்று இந்த இடுகையில் நாம் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஜெயந்தி தொடர்பான அனைத்து விவரங்களையும் மற்றும் அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர் பற்றிய முழுமையான தகவல்களை கீழே விரிவாக அறிந்து கொள்ளுங்கள்

நலிந்த பிரிவினருக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர்:
நாடு முழுவதும் உள்ள மக்கள் பாபா சாகேப் பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். பாரத ரத்னா அம்பேத்கர் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து போராடினார். பாகுபாடுகளை எதிர்கொண்டு தனது கல்வியை முடித்தார். சுதந்திரப் போராட்டத்தில் இணைந்து, சுதந்திர இந்தியாவை ஜனநாயக நாடாக மாற்றுவதற்கான அரசியலமைப்பை உருவாக்குவதில் அபாரமான பங்காற்றினார். பாபா சாகேப் பிற்படுத்தப்பட்ட மற்றும் நலிந்த பிரிவினரின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடினார். பீம்ராவ் அம்பேத்கரின் பிறந்தநாளில், இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் அவரது வாழ்க்கை தொடர்பான சில சுவாரஸ்யமான கதைகளை அறிந்து கொள்ளுங்கள்.

அரசியலமைப்பின் தந்தை:
இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர், 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள மோவ் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். டாக்டர் அம்பேத்கர் ஒரு சமூக சீர்திருத்தவாதி, அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணர், இந்திய சுதந்திர இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். அவர் இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழுவின் தலைவராகவும் இருந்தார் மற்றும் இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகித்தார். அவரது பங்களிப்பு இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. 

மேலும் படிக்க: ‘சாதியை உருவாக்கியது கடவுள் இல்லை.. அர்ச்சகர்கள் தான்’ – சொல்வது ஆர்எஸ்எஸ் தலைவர்

பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கரின் 132வது பிறந்தநாள்:
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரும், தலித்துகளின் மேசியாவும், மனித உரிமை இயக்கத்தின் மாபெரும் அறிஞருமான பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 அன்று கொண்டாடப்படுகிறது. சமூக சீர்திருத்தவாதி பாபா பீம்ராவ் அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதும் பலவீனமானவர்களின் உரிமைகளுக்காக நீண்ட போராட்டத்தை நடத்தினார். இந்த ஆண்டு பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

பாகுபாடு மற்றும் தனிமைப்படுத்தல்:
1981 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி, ராம்ஜி மாலோஜி சக்பால் மற்றும் பீமாபாய் தம்பதியினருக்கு மத்தியப் பிரதேசத்தில் உள்ள மோவ் நகரில் பிவா ராம்ஜி அம்பேத்கர் என்ற இளைய குழந்தை பிறந்தது. பாபாசாகேப் என்று அழைக்கப்படும் அம்பேத்கர், தனது 14 உடன்பிறப்புகளில் இளையவர் ஆவார். டாக்டர். அம்பேத்கர் தீண்டத்தகாதவராகக் கருதப்படும் மஹர் சாதியைச் சேர்ந்தவர். எனவே அவர் சிறுவயதிலிருந்தே பாகுபாடு மற்றும் சமூகத் தனிமைப்படுத்தலுக்கு ஆளாகி வந்தார். 

பாபாசாகேப் சிறுவயதிலிருந்தே சிறந்த மாணவர். பள்ளிக்குச் செல்ல முடிந்த போதிலும், அவர்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்டனர். அக்காலத்தில் நிலவி வந்த தீண்டாமை போன்ற பிரச்சனைகளால் ஆரம்பக் கல்வியில் பல இன்னல்களை அனுபவித்தாலும் சாதியின் சங்கிலிகளை உடைத்து படிப்பில் கவனம் செலுத்தி பள்ளிப் படிப்பை முடித்தார்.

மேலும் படிக்க: ‘ஜாதி மதம் அற்றவர்கள்’ என சான்றிதழ் வாங்கிய தம்பதி: குழந்தைகளுக்கும் விண்ணப்பம்

காந்திக்காக பின்வாங்கினார்:
லண்டனில் படிக்கும் போதே கல்வி உதவித்தொகை காலாவதியாகி வீடு திரும்பிய அவர் மும்பையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். இருப்பினும், இங்கேயும் அவர் சாதி பிரச்சனை எதிர்கொள்ள வேண்டியிருந்தது மற்றும் சமத்துவத்துக்காக போராட வேண்டியிருந்தது. தலித் சமூகத்தினருக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக அம்பேத்கர் உழைக்கத் தொடங்கியதற்கு இதுவே காரணம். அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து தனி வாக்காளர்களைக் கோரினார். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் காந்தி அதற்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபோது, ​​அம்பேத்கர் தனது கோரிக்கையை திரும்பப் பெற வேண்டியிருந்தது.

பாபாசாகேப் அம்பேத்கருக்கு ‘பாரத ரத்னா’:
1913 ஆம் ஆண்டில், அம்பேத்கர் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சட்டம், பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். அவர் இந்தியாவில் தொழிலாளர் கட்சியை உருவாக்கினார். சுதந்திரத்திற்குப் பிறகு சட்ட அமைச்சரானார். பாபாசாகேப் இரண்டு முறை ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் அரசியலமைப்பு குழுவின் தலைவராக இருந்தார். சமுதாயத்தில் சமத்துவத்திற்கு முன்னோடியாக விளங்கிய அம்பேத்கருக்கு 1990 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டது.

டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் ஜெயந்தி ஏன் கொண்டாடப்படுகிறது: 
டாக்டர். பீம்ராவ் அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதையும் நலிவடைந்த மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சம உரிமைகளை கொண்டு வரவும், சாதி அமைப்பை கடுமையாக எதிர்த்து சமூகத்தில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தவும் அர்ப்பணித்தார். ஜாதிப் பாகுபாடு, ஒடுக்குமுறை போன்ற சமூகத் தீமைகளை எதிர்த்துப் போராட பாபா சாகேப் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும், அறிவு தினமாகவும் இந்தியாவில் கொண்டாடுவது இதுதான். சாதி அமைப்பை கடுமையாக எதிர்த்து சமுதாயத்தை சீர்திருத்தும் பணியை செய்துள்ளார்.

மேலும் படிக்க: சமத்துவத்திற்கு குரல் கொடுப்போம் – சமத்துவ நாள் உறுதிமொழி அரசாணை வெளியீடு

அம்பேத்கர் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்: 

– இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பாலின சமத்துவம் அவசியம் என்று நம்பினார். 

– பெண்களின் உரிமைகளுக்கான வலுவாக போராடினார்.

– அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14, நாடு முழுவதும் அம்பேத்கர் ஜெயந்தி தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

– இந்தியாவின் சாதி அமைப்பில் தாழ்த்தப்பட்ட சாதியின் ஒரு பகுதியாகக் கருதப்படும் மஹர் குடும்பத்தில் பிறந்தார்.

– 1927 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் இந்தியர். 

– வெளிநாட்டில் இருந்து பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியரும் டாக்டர். அம்பேத்கர் ஆவார்.

– 1956 ஆம் ஆண்டு தனது 65 வயதில் இறந்தார். ஆனால் அவரது மரபு இந்தியாவில் சமூக நீதி இயக்கங்களை ஊக்குவித்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

– சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான இவர், நாட்டின் சட்ட அமைப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியவர்.

– டாக்டர். அம்பேத்கருக்கு 1990 இல் இந்திய அரசால் இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது குறிபிடத்தக்கது. 

மேலும் படிக்க: உச்ச நீதிமன்ற வாயிலில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *