வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கர்நாடகா தேர்தலில் தேசிய வாத காங்., போட்டியிட முடிவு செய்துள்ளது காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.
கர்நாடக சட்டசபைக்கு மே.10-ம் தேதி ஒரே கட்டமாக தேரத்ல் நடக்கிறது. இத்தேர்தல் ஆளும் பா.ஜ., மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வியூகம் வகுத்து வருகிறது. இரண்டு கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்., கட்சி கர்நாடகா சட்டசபையில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக மாநில நிர்வாகிகளுடன் சரத்பவார் டில்லியில் ஆலோசனை நடத்தினார். கர்நாடகாவில் 40 முதல் 45 தொகுதிகளில் போட்டியடுவது என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
![]() |
சரத்பவாரின் இந்த முடிவால், காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.விற்கு எதிராக கூட்டணி அமைக்கும் முயற்சியில் சரத்பவார் கட்சி அரசியல் செய்து வரும் நிலையில் தற்போது கர்நாடகா தேர்தலில் தனது கட்சியை களம் இறக்கி செல்வாக்கை சோதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement
