Loading

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று காலை கமலாலயத்தில்  செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “முதல்வர் ஸ்டாலின் 200 கோடி லஞ்சம் பெற்றதாகவும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் மீது சில குற்றச்சாடுகளை முன்வைத்துப் பேசினார். 

இதற்குப் பதிலளிக்கும் வகையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர்,”1972-ல் எம்.ஜி.ஆர் அப்போதைய ஆளுநரிடம் கலைஞர் ஊழல் செய்திருப்பதாகப் புகாரளித்தார். அதற்கு வரிக்கு வரி பதிலளிக்கும் முன், உங்கள் குற்றச்சாடுகளைப் பார்த்தேன், படித்தேன், ரசித்தேன் எனக் கலைஞர் கூறினார்.

அண்ணாமலை

அண்ணாமலையின் குற்றச்சாடுகளைப் பார்க்கும்போது எனக்குச் சிரிப்பு தான் வருகிறது. நல்ல நகைச்சுவையாகப்  பேசியிருக்கிறார். அவர் ரபேல் வாட்ச் தொடர்பான குற்றச்சாட்டுக்கு பில்லை தானே வெளியிட வேண்டும். ஆனால் அவர் வெளியிட்டது சீட்டு… பில் வேறு, சீட்டு வேறு என்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆரம்பத்திலேயே பத்திரிகையாளர்களையும், மக்களையும் ஏமாற்றிதான் தொடங்குகிறார். கடைசிவரை பில்லை அவர் காண்பிக்கவே இல்லை.

அண்ணாமலை

அதேபோல, அவர் குற்றம்சாட்டிய அத்தனைப் பேரும் தேர்தலில் போட்டியிட்டவர்கள். அவர்களின் சொத்துப் பட்டியல் பொதுவெளியில் இருக்கிறது. அதைப் படம் போட்டுக்  காட்டியிருக்கிறார். அடுத்தவரின் சொத்துகளையும்  சேர்த்துப்  பட்டியலிட்டிருக்கிறார். அவர் வைத்தது குற்றச்சாட்டல்ல. சொத்து மதிப்பு. உதாரணமாக எல்.ஐ.சி கட்டடம் கட்ட ரூ.87 லட்சம் செலவானதாம். ஆனால், இன்று அதன் மதிப்பு ரூ.1000 கோடியைத்  தாண்டும். அவரின் கணக்கும் சொத்து மதிப்பு தானே தவிர, அவரது குற்றச்சாட்டில் எங்கும் ஊழல் குற்றச்சாட்டு கிடையாது.

இதில் சம்மந்தப்பட்டவர்கள் தனித்தனியே வழக்கு தொடர்வார்கள். கலைஞர் மீது எம்.ஜி.ஆர் வைத்த ஊழல் குற்றச்சாட்டுகள், ஜெயலலிதா வைத்த குற்றச்சாட்டுகள் என எதையும் அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. காரணம் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. அவர்களை விட அண்ணாமலை ஒன்றும் மேதாவியோ, புத்திசாலியோ,  ஆளுமைமிக்கவரோ கிடையாது. அவர் வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு அவரை மக்குமலை என்று தான் மக்கள் குறிப்பிடுகிறார்கள். அவ்வளவு தான் அவரின் தரம்.

ஆர்.எஸ் பாரதி

திமுக-வுக்கென தனியாக ரூ.1408 கோடிக்குச் சொத்து இருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். அதில் பள்ளிகள், கல்லூரிகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.  எங்களுக்குத் தெரியவேண்டியதெல்லாம் அதற்கான ஆதாரம் என்ன? அந்தப் பள்ளிகள், கல்லூரிகள் எங்கு செயல்படுகிறது, எத்தனை இருக்கிறது உள்ளிட்ட தகவல்களை, 15 நாள்களுக்குள் அண்ணாமலை தி.மு.க அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால்  அடுத்தகட்ட  நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்வர் ஸ்டாலின் 2016-ல் ரூ. 200 கோடி லஞ்சம் பெற்றதாகக்  குற்றச்சாட்டியிருக்கிறார். அப்படியானால் அப்போது மத்தியில் பா.ஜ.க தானே ஆட்சியில் இருந்தது. அப்போதே நடவடிக்கை எடுத்திருக்கலாமே… கடந்த 9 வருடங்களாக என்ன செய்துகொண்டிருக்கிறது. மேலும், மெட்ரோ திட்டம் என்பது மத்திய அரசோடு தொடர்புடையது. தற்போது அண்ணாமலை தி.மு.க மீது குற்றஞ்சுமத்துகிறாரா… அல்லது தன் பதவி பறிக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமனை எச்சரிக்கிறாரா?

அண்ணாமலை

மேலும், சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி என அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஒரே நாளில் எம்.பி பதவியை பறிக்கும் அளவு சக்தி படைத்த பா.ஜ.க அரசு ஏன் இதுவரை முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை? ஆளுநருக்கு எதிரான தீர்மானம் கொண்டுவருவது உள்ளிட்ட பல நல்ல செயல்பாடுகளால் இந்தியாவில் இருக்கும் முதல்வர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் ஸ்டாலின் மீது அவதூறு பரப்ப நினைத்தால் அது முடியாது… என்பதை உறுதியாக அண்ணாமலைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

அடுத்தடுத்த கட்சிகளின் ஊழல் வீடியோ  வெளியாகும்  எனப் பேசியிருக்கிறார். ஆம்… அதிமுக-வுடன்  மறைமுகமாகப்  பேரம் பேசியிருக்கிறார். அதுபோல எங்களிடம் பேச முடியாது என்பதாலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பற்றி எரியும் அம்பானி விவகாரம், ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டவரின் வாக்குமூலத்தில் அண்ணாமலை  அன்ட் கோ பெற்ற ரூ.84 கோடி விவகாரம் வெளியே வந்திருப்பதால், இவைகளை திசைதிருப்ப, கைதுசெய்யப்பட்டுவிடுவோம் என்ற பயத்தில் என்னென்னமோ பேசிவருகிறார். இது தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும். அண்ணாமலை இனி நீதிமன்றம் நீதிமன்றமாக அலைவார்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *