வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பிர்பூம்: பா.ஜ.,வை சேர்ந்தவர் தான் மேற்குவங்கத்தின் அடுத்த முதல்வராக வருவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரண்டு நாள் பயணமாக மேற்குவங்க மாநிலம் சென்றுள்ளார். அங்குள்ள பிர்பூம் மாவட்டத்தில் பா.ஜ., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: பயங்கரவாதத்தில் இருந்து மேற்குவங்கத்தை விடுவிக்க, ஒரே வழி, பா.ஜ., தான். இங்கு ஊடுருவலை தடுக்க, ஒரே வழி, பா.ஜ., தான். 2024 லோக்சபா தேர்தலில், எங்களுக்கு (பா.ஜ.,வுக்கு) 35 இடங்களை கொடுங்கள். 2025ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே மம்தாவின் அரசாங்கம் கவிழ்ந்து விடும்.

மம்தா பானர்ஜி தனக்கு பிறகு தனது மருமகன் முதல்வராக வருவார் என கனவு காண்கிறார். பிர்பூமில் இருந்துக்கொண்டு சொல்கிறேன். மேற்குவங்கத்தின் அடுத்த முதல்வர் பா.ஜ.,வை சேர்ந்தவர் தான் என உறுதியாக கூறுகிறேன். அதற்கான டிரைலரை வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement
