ஒரு சிலை என்ன செய்து விட முடியும் என்று கேட்டால், அடுத்த தலைமுறைக்கு சித்தாந்தத்தின் விதையினை விதைத்திட முடியும். வரலாற்றினை கூர்ந்து கவனித்தால் சிலைகளை நிறுவுதல், அகற்றுதல் தான் அரசியல் மொழியாக இருந்துள்ளது. அவ்வாறு இப்போது நிறுவப்பட்ட சிலைதனில் அம்பேத்கர், மாற்றத்தின் நவீன முகமாக கோட் சூட் போட்டுக் கொண்டு, கையில் அரசியல் சாசன புத்தகத்தை வைத்துக் கொண்டு, முன்னோக்கி கையை நீட்டி சமத்துவ அரசியல் மொழியைப் பேசிக்கொண்டிருக்கிறார்.

அதனை இருவிதமாகப் பார்க்கலாம். ஒன்று, ‘ஆதிக்கவாதிகளே, இனி வரும் காலங்களில் எவ்வகையிலும் என் மக்களைக் கொடுமைகளுக்கு உட்படுத்தினால் நான் உருவாக்கிய சட்டங்கள் உங்கள்மீது பாயும்’ எனும் எச்சரிக்கை. மற்றொன்று, ‘நான் உருவாக்கிய அரசியல் சாசனத்தைப் பிடித்துக் கொண்டு எப்படியாவது முன்னேறி விடு. கற்பி, ஒன்று சேர், புரட்சி செய். அதுவே நான் உனக்கு அமைத்திருக்கும் வழித்தடம். அதனைப் பின்தொடர்ந்திரு’ எனும் நம்பிக்கையின் வழிகாட்டியாகவும் பார்க்கலாம்.
இது சிலையல்ல, சித்தாந்தம்; குரலற்ற மக்களின் அறிவாயுதம்!