வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிக்கு, சமீபத்தில் தலைமைத் தேர்தல் கமிஷன் தேசிய அந்தஸ்து வழங்கியது. விதிப்படி, தேசிய அந்தஸ்து உள்ள கட்சிக்கு, தலைநகர் புதுடில்லியில் அலுவலகம் கட்ட நிலம் ஒதுக்கப்படும்.
![]() |
அந்த வகையில், புதுடில்லியில் தலைமை அலுவலகம் கட்ட நிலம் தரும்படி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுத ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.
![]() |
நிலம் ஒதுக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் கட்சி அலுவலகம் கட்டப்பட வேண்டும்.
அதுவரை, கட்சி அலுவலகத்தை நடத்த, சம்பந்தப்பட்ட கட்சிக்கு, மத்திய டில்லியில் அரசு பங்களா ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement