தமிழ்நாடு:

சித்திரை திருநாள், தமிழ் புத்தாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் கோயில்களில்  குவிந்த மக்கள்: அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்

தமிழ் புத்தாண்டை ஒட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

திமுகவின் ஊழல் பட்டியலை இன்று வெளியிடுவதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்ற பெயரில் பயன்பாட்டிற்கு வருகிறது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – ஜுன் மாதம் திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது – ஆளுநர் ரவி விளக்கம்

தமிழ்நாட்டில் கரூர், வேலூர்  உட்பட  12 இடங்களில் சதம் அடித்தது வெயில் – அதிகபட்சமாக  சேலத்தில் 105 டிகிரியாக பதிவானது வெப்பம்

இந்தியா:

டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில்  நடைபெற்ற தமிழ் புத்தாண்டு விழாவில்,  பிரதமர் மோடி வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றார்.

உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும் – தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் இன்று அரசு விடுமுறை

நாடாளுமன்ற தேர்தலுக்காக ஓரணியில் இணையும்  எதிர்க்கட்சிகள்: கார்கே, ராகுல்  காந்தி உடன்  தேசியவாத காங்கிரஸ் தலைவர்  சரத் பவார் நேரில் ஆலோசனை

ஐதராபாத்தில் கட்டப்பட்டு உள்ள 125 அடி உயர அம்பேத்கர் சிலை இன்று திறப்பு

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு மீண்டும் 4% இடஒதுக்கீடு

உலகம்:

ஜப்பான் மற்றும் வடகொரியா நாடுகளிடையே உள்ள கடற்பகுதியில் மீண்டும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை சோதித்த வடகொரியா – வலுக்கும் கண்டனங்கள்

உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: 15 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி நார்வே அரசாங்கம் அதிரடி

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கை தசையை  நாக்கில் பொருத்தி இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை

மியான்மரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது  தொடர்  கார் குண்டு வெடிப்பு – 4 பேர் பலி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 3 வழக்குகளில் ஜாமீன் – லாகூர் கோர்ட்டு உத்தரவு

விளையாட்டு:

ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் பஞ்சாப் அணியை நடப்பு சாம்பியனான குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன

சென்னையில் வரும் 30ம் தேதி சிஎஸ்கே- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டியை இலவசமாக காண குமரி முதல் சென்னை வரை மீண்டும் இயக்கப்படுகிறது விசில் போடு எக்ஸ்பிரஸ்

ஆசிய மல்யுத்த போட்டி: தங்கம் வென்றார் இந்திய வீரர் அமன் ஷெராவத்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: