காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவியை 6 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஜனவரி மாதம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, தனது காதலனுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு முகக் கவசம் அணிந்தபடி வந்த 6 பேர் காதலன் கண்முன்னே மாணவியை கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இவர்களில் காஞ்சிபுரம் வளர்புரம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (எ) விக்கி, செவிலிமேடு மணிகண்டன், விப்பேடு இருளர் குடியிருப்பைச் சேர்ந்த சிவக்குமார் (எ) ஊக்கு ஆகிய முக்கிய குற்றவாளியான 3 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி உத்தரவிட்டார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: