சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி ராஜஸ்தானுக்கு எதிராக 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. கடைசி ஓவரில் தோனி அடுத்தடுத்த சிக்ஸர்களைப் பறக்கவிட்ட போதும் சந்தீப் சர்மாவின் திறமையான பந்துவீச்சால் சென்னை அணி இலக்கை நெருங்கி வந்து கோட்டைவிட்டது. இந்தத் தோல்விக்குப் பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி தோல்விக்கான காரணங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

தோனி

தோனி பேசியவை, “பந்துவீச்சாளர்களின் செயல்பாட்டில் எனக்கு மகிழ்ச்சியே. இந்தத் தோல்விக்கான பொறுப்பை பேட்டர்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், மிடில் ஓவர்களில் (9 ஓவர்கள்) பெரிதாக ஸ்ட்ரைக்கை ரொட்டேட்டே செய்யவில்லை. பிட்ச் ரொம்பவே மெதுவாக இருந்து பந்து காற்றில் நின்று வந்திருந்தால் கூட ஓகே. ஆனால், பிட்ச் அந்த அளவுக்கெல்லாம் மோசமாக இல்லை. ராஜஸ்தான் அணியில் அனுபவமிக்க ஸ்பின்னர்கள் இருந்தபோதும் ஸ்கோர் செய்யும் வாய்ப்புகளெல்லாம் இருந்தன. அதை பேட்டர்கள் தவறவிட்டுவிட்டார்கள்.

ஜடேஜாவும் நானும்தான் முழுமையான கடைசி பேட்டிங் கூட்டணி. சறுக்கல்களுக்குப் பிறகும் கூட டார்கெட்டை இவ்வளவு நெருங்கி வந்தது மகிழ்ச்சி.

டெத் ஓவர்களில் பௌலர்களை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றிய கேள்விக்கு தோனி, “பௌலர் என்ன செய்யப் போகிறார் என்பதை கணிக்க வேண்டும். ஃபீல்டைச் சரியாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். பௌலர்கள் தவறு செய்யும் வரை காத்திருக்க வேண்டும். தவறே செய்யாமல் நல்ல லென்த்தில் வீசி விட்டார்கள் எனில் பௌலர்களுக்கு அதிர்ஷ்டம். எதோ ஒன்றிரண்டு இன்ச்கள் மிஸ் ஆனால் கூட அட்டாக் செய்துவிட வேண்டும். ஃபேன்சி ஷாட்களையெல்லாம் நான் ஆடுவதில்லை. வலுவாக நேராக ஆடுவதுதான் என்னுடைய பலம். இறுதிக்கட்டத்தில் அப்படியான ஷாட்களை ஆடத்தான் நினைப்பேன்!” என்றார்.

கேப்டனாக 200வது போட்டி பற்றிய கேள்விக்குப் பதிலளித்த தோனி,

Dhoni

“இது 200 வது போட்டி என்றே வெகு தாமதமாகத்தான் எனக்குத் தெரியும். தனிப்பட்ட மைல்கல் சாதனைகளை எப்போதுமே பெரிதாக எண்ணியதில்லை. அணிக்காக நல்ல தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். 199வது போட்டிக்கும் 200வது போட்டிக்கும் அப்படி என்ன வித்தியாசம் இருந்துவிடப்போகிறது?” என்றார்.

தோல்வியிலிருந்து சென்னை அணி மீண்டு வருமா?

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: