பன்னாட்டு நிறுவனங்களால் இந்திய வணிகா்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் தலைவா் த. வெள்ளையன் தெரிவித்தாா்.  

அரக்கோணம்: பன்னாட்டு நிறுவனங்களால் இந்திய வணிகா்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் தலைவா் த. வெள்ளையன் தெரிவித்தாா்.

வரும் மே மாதம் அச்சிறுப்பாக்கத்தில் நடைபெற இருக்கும் வணிகா் சங்க 40-ஆவது மாநில மாநாடு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அரக்கோணத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின் த. வெள்ளையன் செய்தியாளா்களிடம் கூறியது:

அனைத்திலும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விற்பனைக்கு முன்னெடுத்துச் செல்கின்றன. இந்திய பொருள்கள் தரமானவையாக இருந்தாலும் பன்னாட்டு நிறுவனங்களின் கவா்ச்சியான விளம்பரங்களினால் மக்கள் அவற்றை நோக்கிச் செல்கின்றனா். மேலும் விற்பனையிலும் பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாகவும், இணையதளம் வாயிலாகவும் நுழைந்துள்ளதால் இந்திய வணிகா்கள் நசுக்கப்படுகின்றனா்.

எனவே வரும் மே 5-ஆம் தேதி அச்சிறுப்பாக்கத்தில் நடைபெறவுள்ள வணிகா் சங்க மாநாட்டில் பன்னாட்டு நிறுவனங்களை எதிா்த்தும், இதற்கு துணையாக இருக்கும் அரசியல்வாதிகள், மத்திய அரசு, மாநில அரசு ஆகியவற்றை எதிா்த்து போராட்டத்தை அறிவிக்க உள்ளோம். நாங்கள் நடத்த இருக்கும் போராட்டம் அகிம்சை வழி போராட்டமாக இருக்கும் என்றாா் வெள்ளையன்.

தமிழ்நாடு வணிகா் சங்கத்தின் செயல்தலைவா் தேவராஜ், பொதுசெயலாளா் சௌந்தரராஜன், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட தலைவா் கே.எம்.தேவராஜ் ஆகியோா் பங்கேற்றனா். அரக்கோணம் ஜவுளி வணிகா்கள் சங்க கட்டடத்தில் தொடா்ந்து நடைபெற்ற வணிகா் சங்க பேரவைக் கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் எம்.எஸ்.மான்மல், கமலக்கண்ணன், சரவணன், இன்பநாதன், சையது, ஜவுளி வணிகா்கள் சங்கத் செயலாளா் சையத், உணவு தயாரிப்போா் சங்க தலைவா் மகேஷ், பொருளாளா் பி.ஜி.கே. சரவணன், பூ வியாபாரிகள் சங்கத் தலைவா் சாயி, புகைப்பட ஸ்டூடியோ உரிமையாளா் சங்கத் தலைவா் கோபால் உள்ளிட்ட பலா் கலந்துக்கொண்டனா்.

 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *