வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் இன்று (ஏப்.,13) மாலை நடைபெற உள்ள தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாளை (ஏப்.,14) சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு டில்லியில் பா.ஜ., சார்பில் தமிழ் புத்தாண்டு விழா இன்று நடைபெற உள்ளது. டில்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் மாலை 6:30 மணிக்கு நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
Advertisement
