சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த இளங்கலை தமிழ் 3 ஆம் ஆண்டு படிக்கும் 10 மாணவர்கள் இன்று காலை கல்வடங்கம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் காவேரி ஆற்றில் நீர்வரத்து கடந்த சில நாட்களாக குறைவாக இருப்பதால், குளிக்க ஆற்றின் நடுப்பகுதிக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது, மாணவர்களில் ஒருவர் காவிரியாற்றின் மையத் பகுதிக்கு சென்ற போது ஆழமான பகுதியில் சிக்கி கொண்டுள்ளார். இவரை மீட்க சக மாணவர்கள் உதவி செய்யும் போது, நீச்சல் தெரியாத 4 மாணவர்கள் தண்ணீரில் சிக்கி மூழ்கியுள்ளனர். இதனை பார்த்த சக நண்பார்கள் கூச்சலிட்டு சத்தம் போட்டனர். 

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒடி வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், தகவல் அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த எடப்பாடி தீயணைப்பு துறையினர் மற்றும் தேவூர் காவல்துறையினர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, நீச்சல் தெரியாததால் இளம்பிள்ளையை சேர்ந்த மணிகண்டன் (20), கன்னந்தேரியே சேர்ந்த மணிகண்டன் (20), எருமபட்டியை சேர்ந்த முத்துசாமி (20) மற்றும் எட்டிகுட்டமேட்டை சேர்ந்த பாண்டியராஜன் (20) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து நீரில் மூழ்கிய 4 மாணவர்களை தேடும் பணியில் எடப்பாடி தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வந்தனர். மாலை வரை நடைபெற்ற மீட்பு பணியில் மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு நான்கு மாணவர்களின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். 

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மேட்டூர் ஆர்டிஓ தணிக்காசலம், சங்ககரி டிஎஸ்பி ஆரோக்கியராஜ், சங்ககரி தாசில்தார் பானுமதி, எடப்பாடி தாசில்தார் லெனின் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து அவர்களுடன் வந்த சக மாணவர்களிடம் கேட்டறிந்தனர். பின்னர், 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அறிந்த பெறோர்கள், குடும்பத்தினர் கதறி அழுதனர். அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கல்வடங்கம் காவேரி ஆற்றின் பகுதியில் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சங்ககரி, தேவூர் போலீஸார் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவேரி ஆற்றில் 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவலை அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், காவிரி ஆற்றல் குளிக்கச் சென்று எதிர்பாராமல் 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து மிகவும் வருத்தம் அடைகிறேன். உயிரிழந்த 4 கல்லூரி மாணவர்களின் குடும்பத்திற்கும் தல 2 லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *