புதுடெல்லி: இந்தியாவின் தென் மாநிலமான ஆந்திர பிரதேச மண்ணில் இருந்து 15 அரிய தனிமங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (NGRI) ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் 15 REE தனிங்களின் இருப்பை கண்டறிந்துள்ளது. லாந்தனைடு தொடரின் REE தனிமங்கள், செல்போன்கள், தொலைக்காட்சிகள், கணினிகள், ஆட்டோமொபைல்கள் போன்ற மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. NGRI விஞ்ஞானிகள் அனந்தபூரில் சயனைட் (மரபு அல்லாத பாறை) கண்டறிவதற்காக ஆராய்ச்சி நடத்தினர். அப்போது இந்த தனிமங்கள் கண்டறியப்பட்டன. அடையாளம் காணப்பட்ட அரிய தனிமங்கள் அல்லனைட், செரைட், தோரைட், கொலம்பைட், டான்டலைட், அபாடைட், சிர்கான், மோனாசைட், பைரோகுளோரெக்சனைட் மற்றும் புளோரைட் ஆகியவை ஆகும்.

மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் REE 

NGRI விஞ்ஞானி பிவி சுந்தர் ராஜு  இது குறித்து கூறுகையில், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபள்ளே மற்றும் பெத்தவடகுரு கிராமங்களில் இருந்து பல்வேறு அளவுகளில் சிர்கான்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்றார். REE பற்றி மேலும் அறிய ஆழமான துளையிடுதலுடன் மேலதிக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் சுந்தர் ராஜு கூறினார். இந்த கூறுகள் மின்னணுவியல், சுத்தமான ஆற்றல் விண்வெளி, வாகனம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இது மொபைல் போன்கள், கணிணிகள்,  தொலைகாட்சிகள் போன்ற நவீன எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், காற்றாலை விசையாழிகள், ஜெட் விமானம் மற்றும் பல தயாரிப்புகளின் இன்றியமையாத அங்கமாகும்.

REE நிறைந்த தாதுக்களின் மையங்கள்

REE பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. REE மற்றும் அரிய-உலோக தொடர்பான ஆய்வுகள் தற்போது ஆந்திராவில் செய்யப்படுகிறது என்று NGRI விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வு நடத்தப்படும் வளாகம் கடப்பா படுகையின் தென்மேற்கில் அமைந்துள்ளது. டான்செர்லா, பெத்தவடுகுரு, தண்டுவரிபள்ளே, ரெட்டிபள்ளே மற்றும் சிந்தலசெர்வு பகுதிகள் மற்றும் அனந்தபூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களில் உள்ள புலிகொண்டா வளாகம் ஆகியவை இந்த REE நிறைந்த தாதுக்களின் மையங்களாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | இந்தியாவின் ’லித்தியம் புதையல்’ பேட்டரி துறையில் சீனாவை பின்னுக்கு தள்ளும்..! எப்படி?

ஏகபோக உரிமை கொண்டுள்ள சீனா

பெரும்பாலான REE சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. 1993ல், உலக உற்பத்தியில் 38 சதவீதம் சீனாவிலும், 33 சதவீதம் அமெரிக்காவில், 12 சதவீதம் ஆஸ்திரேலியாவிலும், தலா ஐந்து சதவீதம் மலேசியாவிலும் இந்தியாவிலும் இருந்தது. 2008 வாக்கில், REE இன் உலக உற்பத்தியில் 90 சதவீதத்திற்கும் மேலாக சீனாவின் பங்களிப்பு இருந்தது. 2011 இல் 97 சதவீதத்தை எட்டியது. 1990 களில் சீன அரசாங்கம் REE இன் அளவைக் கட்டுப்படுத்தியதால் REE சப்ளை ஒரு சிக்கலாக மாறியது. சீன மற்றும் சீன-வெளிநாட்டு கூட்டு நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யக்கூடிய REEகளின் எண்ணிக்கையை சீன அரசாங்கம் கட்டுப்படுத்தத் தொடங்கியது. இந்தியா சீனாவிடமிருந்து 80 சதவீத லித்தியத்தை வாங்கும் நிலையில், இது இந்தியாவிற்கு நல்ல செய்தியாகவும், சீனாவிற்கு அதிர்ச்சி செய்தியாகவும் உள்ளது என்றால் மிகையில்லை.

ஜம்மு காஷ்மீரில் லித்தியம்

இந்தியாவின் பார்வையில், REE தொடர்பான செய்திகள் உண்மையில் நன்மை பயக்கும். பிப்ரவரி மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் லித்தியம் இருப்பு கண்டறியப்பட்டது. நாட்டிலேயே முதன்முறையாக லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அவை ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ளன. இதன் அளவு 5.9 மில்லியன் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த உலோகம் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளில் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | லித்தியம்: அசுர பலத்தோடு இருக்கும் சீனா…! இந்தியா இன்னும் சிந்திக்கனும்

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: