முதலில் இயற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் நிராகரிக்கவே, இரண்டாவது முறையும் ஒரு மனதாக மசோதா நிறைவேற்றியதும் தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பது கவனிக்கதக்கது. மேலும் இதனை நீதிமன்றம் சென்று தடை பெற ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் ஆயுத்தமாகலாம். தமிழ்நாடு இதனை மிக கவனமாக கையாள வேண்டும் என தமிழக அரசிற்கு கோரிக்கை வைக்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

“ரம்மி என்பது திறமையின் அடிப்படையிலான விளையாட்டு, அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலான விளையாட்டுதான் சூதாட்டம் என்பது உச்ச நீதிமன்றத்தின் கூற்று. ஆக ரம்மி விளையாடத் தடை கிடையாது. ஆனால் நேரடியாக விளையாடும் விளையாட்டுகளுக்கே நீதிமன்றத்தின் தீர்ப்பு பொருந்துமே தவிர எதிரில் மனிதர்கள் அல்லாது இயந்திரத்தோடு விளையாடுபவர்களுக்கு நீதிமன்றத்தின் கூற்று பொருந்தாது என்பது நீதியரசர் சந்துருவின் தலைமையிலான கமிட்டியின் கருத்து. இக்கருத்தை அடிப்படையாக வைத்துத் தான் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டமே இயற்றப்பட்டுள்ளது” என்கிறார் தராசு ஷ்யாம்.