அதைத் தொடர்ந்து, வடகொரியாவுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. ராஜதந்திரத்தின் கதவு மூடப்படவில்லை. எனவே, உடனடியாக உங்களின் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறது.
தென்கொரிய ராணுவ அதிகாரி, “சமீபத்தில் வடகொரிய ராணுவ அணிவகுப்புகளில் காட்டப்பட்ட ஒரு புதிய ஆயுத அமைப்பை இந்தச் சோதனை உள்ளடக்கியதாகத் தெரிகிறது.

ஏவுகணையின் பாதை, வரம்பை ராணுவம் ஆய்வுசெய்து வருகிறது. மேலும், இது திட எரிபொருள் ஏவுகணையாக இருக்கலாம் என்று பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்திருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து ஜப்பானின் கடலோர காவல் படை, “வடகொரியா ஏவுகணை வடகொரியாவுக்கு கிழக்கே இருக்கும் கடலில் விழுந்திருக்கக்கூடும். இது குறித்து ஆய்வுசெய்து வருகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறது.