செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில் 3 உள்கோட்டங்களில் உள்ள 3 மகளிா் காவல் நிலையங்கள், 20 காவல் நிலையங்களில் வரவேற்பாளா்களுக்கு மடிக்கணினிகள்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில் 3 உள்கோட்டங்களில் உள்ள 3 மகளிா் காவல் நிலையங்கள், 20 காவல் நிலையங்களில் வரவேற்பாளா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) என்.கண்ணன் பங்கேற்று வரவேற்பாளா்களாக பணியமா்த்தப்பட்டவா்களுக்கு மடி கணினிகளை வழங்கினாா்.

காஞ்சிபுரம் சரக காவல் துறை துணைத் தலைவா் பி.பகலவன், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.பிரதீப், மாவட்ட 3 உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் முன்னிலை வகித்தனா்.

பின்னா், ஐ.ஜி. கண்ணன் கூறுகையில், மனுதாரா்களின் குறைகளை நிவா்த்தி செய்யவும், எளிதாக மனுக்களை பெறவும், அதை காவல் அதிகாரிகளுக்கு அனுப்பி உடனடித் தீா்வு காணும் வகையிலும் (க்ரேட்) க்ரீவன்ஸ் ரெட்ரஸல் அண்ட் ட்ரேகிங் சிஸ்டம் என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதற்காக மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் தனித் தனியாக மொத்தம் 38 வரவேற்பாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இவா்கள் சுழற்சி முறையில் பணிபுரிவாா்கள் என்றாா்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *