நீரஜ் சோப்ரா அடுத்த மாதம் தோஹாவில் தொடங்கும் டைமண்ட் லீக் பட்டப் போட்டிகளில் கலந்து கொள்கிறார். இந்த களத்தில், உலக சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் மற்றும் டோக்கியோ 2020 வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வட்லெஜ்ச் என ஈட்டி எறிதல் ஜாம்பவான்களுடன் நீரஜ் சோப்ரா போட்டியிடுகிரார்.

ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ், தோஹா டயமண்ட் லீக்கின் கடினமான களத்தில் போட்டியிட கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, மே 5 அன்று தோஹாவில் தனது பதக்க வேட்டையைத் தொடங்குவார் என்று டயமண்ட் லீக்கின் அறிக்கை கூறுகிறது.

“ஒலிம்பிக் ஈட்டி சாம்பியனும், உலக போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா – 89.94 மீட்டர் தூரம் எறிந்து இந்திய தேசிய சாதனை படைத்தவர், மே 5 வெள்ளிக்கிழமை தோஹா போட்டிகளில் களம் இறங்குகிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (ஜிஆர்என்) மற்றும் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வட்லெஜ்ச் (சிஇசட்இ) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்” என அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் படிக்க | ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பதக்க வேட்டையாடும் இந்திய வீராங்கனைகள்

காயம் காரணமாக, சோப்ரா 2022 தோஹா போட்டியைத் தவறவிட்டார். அந்தப் போட்டியில் இரண்டு தேசிய சாதனைகள் முறியடிக்கப்பட்டன. 

“கடந்த ஆண்டு ஒரு தனிப்பட்ட முறையில் சிறந்த ஆண்டாக இருந்தது. வெள்ளிப் பதக்கம் மற்றும் வாண்டா டயமண்ட் லீக் வெற்றியுடன் எனக்கு ஒரு நல்ல ஆண்டாக இருந்தபோதிலும், இந்த ஆண்டு மேலும் பல புதிய வாய்ப்புகளைத் தருகிறது. இந்தக் கோடையில் எனது இலக்கு உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.

பீட்டர்ஸ் தோஹா போட்டிகளில் கலந்துக் கொள்கிறார். ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற வாட்லெஜ்ச் – ஐரோப்பிய வெள்ளிப் பதக்கம் வென்றவர் மற்றும் யூஜினில் வெண்கலப் பதக்கம் வென்றவர் – இவர் தோஹாவில் 2022 இல் தனது முதல் 90 மீ (90.88 மீ) எறிதல் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.

இந்த முறை, நீரஜ் சோப்ரா, பீட்டர்ஸ், வாட்லெஜ்ச் என மூவருடன், தோஹாவில் நடைபெறும் போட்டிகளில் ஐரோப்பிய சாம்பியனான ஜூலியன் வெபரும் கலந்துக் கொள்கிறார். ஒலிம்பிக் மற்றும் உலக ஈட்டி எறிதல் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்தவர் இவர்.

மேலும் படிக்க | சிலிண்டர் டெலிவரி செய்பவரின் மகன் ரிங்கு சிங்! KKR ஆட்டநாயகனின் ஊக்கமளிக்கும் பின்னணி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: