IPL 2023 CSK vs RR: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நேற்று (ஏப். 13) நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் சென்னை பந்துவீசியது. 

அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 176 ரன்களை சென்னை அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. கடைசி பந்து வரை பரபரப்பாக சென்ற போட்டியில், ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி, ஜடேஜா ஜோடி கடைசி வரை போராடியும், அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. தோனி 32 ரன்களுடனும், ஜடேஜா 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சந்தீப் சர்மா கடைசி ஓவரில் துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீசி ராஜஸ்தான் அணியின் வெற்றியை உறுதிசெய்தார். 

மேலும் படிக்க | IPL 2023: ‘நாங்கள் அதனால் தான் தோற்றோம்’ – கேப்டன் தோனி கூலாக சொன்னது என்ன?

ராஜஸ்தான் வீரரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வானார். 2008ஆம் ஆண்டிற்கு பின், ராஜஸ்தான் அணி சென்னை சேப்பாக்கத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், ராஜஸ்தான் வீரர் பட்லர் ஐபிஎல் தொடரில் 3000 ரன்களை கடந்தார். குறிப்பாக, அதிவேகமாக 3000 ரன்களை குவித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பட்லர் பெற்றார்.

Sadhguru

குறிப்பாக, நேற்றைய போட்டியானது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியின் 200ஆவது போட்டியாகும். எனவே, தோனியின் ஆட்டத்தை காண சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள்  சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்தனர். சென்னை அணி தோல்வியடைந்தாலும், தோனியின் ஆக்ரோஷ ஆட்டத்தை பார்த்த மகிழ்ச்சியில் பார்வையாளர்கள் திளைத்திருந்தனர். 

மேலும், தோனியின் 200ஆவது போட்டியில் பார்வையாளராக சத்குரு அவர்களும் கலந்துகொண்டார். ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் சத்குருவும் சென்னை – ராஜஸ்தான் போட்டியை கண்டுக்களித்தனர். 

Sadhguru

மேலும் படிக்க | சிலிண்டர் டெலிவரி செய்பவரின் மகன் ரிங்கு சிங்! KKR ஆட்டநாயகனின் ஊக்கமளிக்கும் பின்னணி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *