நாகவாரா-உபகரணங்கள் சேகரித்து வைத்திருந்த கிட்டங்கியில், எதிர்பாராமல் தீப்பிடித்ததில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகின.
பெங்களூரு, நாகவாராவின், ரயில் தண்டவாளம் அருகில் உபகரணங்கள் சேகரித்து வைக்கும் தனியார் கிட்டங்கி உள்ளது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை 5:30 மணியளவில், கிட்டங்கியில் தீப்பிடித்தது.
கிட்டங்கி உள்ளிருந்து அடர்ந்த புகை வருவதை பார்த்த அப்பகுதியினர், உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயணைப்பு படையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். அதற்குள் பெரும்பகுதி பொருட்கள் தீக்கிரையாகின. அதிர்ஷ்வடசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
கே.ஜி.ஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement
