Chennai
oi-Shyamsundar I
சென்னை: 7 மாதங்களில் முதல் முறை நாடு முழுக்க கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியது உள்ளது. நாடு முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளன. தற்போது ஏற்படும் கொரோனா காரணமாக பெரிய அளவில் யாரும் மரணம் அடையவில்லை. தற்போது மிகவும் லேசான கொரோனாவே மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது.

ஆனாலும் கேஸ்கள் தீவிரமாக ஏற்பட்ட வண்ணம் உள்ளன. முக்கியமாக கடுமையான உடல் வலிதான் இதன் முக்கியமான அறிகுறி ஆகும். குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படுத்துவதாகவும், பலருக்கும் மூச்சு விடுவதில் கூட சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
அதாவது சளி கடுமையாக இதயத்தை நெருக்கி உள்ளதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் யாருக்கும் ஆக்சின் லெவல் குறையவில்லை. அதேபோல் யாருக்கும் செயற்கை சுவாசம் அளிக்கும் அளவிற்கு நிலை ஏற்படவில்லை.
XBB.1 மற்றும் XBB.1.15 வைரஸ்கள் சமீபத்தில் உலகம் முழுக்க பல நாடுகளில் பரவியது. முக்கியமாக சீனாவில் பரவியது. ஆனால் இந்தியாவில் அப்போது பரவில்லை. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதற்கு XBB.1.16 வைரஸ்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

தினமும் அதிகரித்து வந்த கொரோனா கடந்த 3 நாட்களுக்கு முன் 6 ஆயிரம் என்ற நிலையை அடைந்தது. அதன்பின் நேற்று முதல்நாள் 7 ஆயிரம் என்ற எண்ணிக்கையை தொட்டது. இதையடுத்து நேற்று 7 மாதங்களில் முதல் முறை நாடு முழுக்க கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியது உள்ளது.
நாடு முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சரியாக 223 நாட்கள் கழித்து இந்தியாவில் ஒரே நாளில் இத்தனை கேஸ்கள் பதிவாகி உள்ளன.
நேற்று மட்டும் கொரோனா பாதிக்கப்பட்ட 11 பேர் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 4,692 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்தத்தில், இதுவரை 4,42,04,771 நோயாளிகள் கொரோனா வைரஸால் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் குணமடைந்த நபர்கள் விகிதம் 98.72 சதவீதமாக உள்ளது.
நாட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 40,215 ஆக அதிகரித்துள்ளது. தினசரி தொற்று விகிதம் 3.65 சதவீதம் ஆக உள்ளது .
தமிழ்நாட்டிலும் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து இருப்பதாக தமிழ்நாடு சுகாதாத்துறை தெரிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 432 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,093 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 432 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,489 ஆக அதிகரித்து இருக்கிறது. இன்று கொரோனாவால் குணமடைந்து 243 பேர் வீடு திரும்பி இருக்கிறார்கள்.
பகீர் கிளப்பும் கொரோனா.. தமிழ்நாட்டில் இன்றும் ஒருவர் பலி! 96 வயது சென்னை முதியவருக்கு என்னாச்சு?
English summary
Coronavirus rise in India: More than 7 thousand cases reported in the country after 7 months
Story first published: Thursday, April 13, 2023, 7:18 [IST]