Loading

பாலியல் புகாருக்கு உள்ளான கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகத்திற்கு ஆதரவாக பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டவர் தான் பிக்பாஸ் அபிராமி. இவர் தன்னை பற்றி விமர்சித்த முன்னாள் நடிகை ஒருவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்த விவகாரம் மறுபடியும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. என்ன விவரம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

கடந்த மூன்று வாரங்களாக தமிழ்நாடு முழுவதும் பேசு பொருளாக இருந்து வருகிறது கலாஷேத்ரா பாலியல் விவகாரம். இதில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரான ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார். இவருடன் மேலும் 3 ஆசிரியர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. அவர்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு எதிராக கலாஷேத்ராவின் முன்னாள் மாணவியான பிக்பாஸ் அபிராமி பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். 

மேலும் படிக்க | 26 வயது நடிகை உயிரிழப்பு… துக்கத்தில் கொரியன் சீரிஸ் ரசிகர்கள்!

குறிப்பாக கலாக்ஷேத்ரா என்று உச்சரிக்கத் தெரியாத நபர்கள் எல்லாம் கலாஷேத்திரா பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறி பிரச்சனையை தொடங்கி கிளப்பினார். அடுத்தடுத்து அவரது பல பேட்டிகள் நெட்டிசன்களால் டிரால் செய்யப்பட்டது. கல்லூரி நிர்வாகத்திற்கு அபிராமி முட்டு கொடுப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் சினிமா துறையை சார்ந்த பலருமே அபிராமியின் இந்த பேச்சுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு அபிராமி கொடுத்த பேட்டியில், ஹரி பத்மனுக்கு எதிராக ஆசிரியர்கள் சிலர் மாணவர்களை manipulate செய்து இப்படி பேச வைப்பதாகவும், தனக்கே போன் செய்து சில ஆசிரியர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக பேச சொன்னதாகவும் கூறி ஆதாரங்களை காண்பித்தார். மேலும் தான் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு எதிராக பேசவில்லை என்றும், ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் எனவும், உண்மையாகவே மாணவிகள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்காக நிற்பேன் என்று தெரிவித்திருந்தார்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க சமீபத்தில் முன்னாள் நடிகையான குட்டி பத்மினி கலாக்ஷேத்ரா விவகாரம் பற்றியும் அபிராமி பற்றியும் பேசி இருக்கிறார். அதுதான் தற்போது புயலை கிளப்பி உள்ளது. உங்களைப் போன்றோர் சினிமாவில் இருக்கிறீர்கள். அதனால் பிறர் தொடும்போது உங்களுக்கு அந்த ஃபீல் இருக்காது. ஆனால் அங்கு போராடிய பெண்களுக்கு அப்படி இல்லை. நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்கள் அவர்கள். அவங்க மனவேதனையை இப்படி சாதாரணமா சொல்லிட்டீங்க, எனக்கு பத்திக்கிட்டு வருது நீங்க பேசுனது என்று கூறியிருந்தார். 

இதற்கு கடுப்பான அபிராமி அவருக்கு தர லோக்கலாக பதிலடி கொடுத்துள்ளார். அவர், “சினிமா துறையில் இருக்க எல்லா பெண்களும் உங்கள மாதிரி கிடையாது குட்டி பத்மினி ஆன்ட்டி. உங்களுக்கு எந்த ஃபீலும் இல்லாதது வருத்தம் தான். உங்களுக்கே பத்திகிட்டு வருதுனா நல்ல குடும்பத்தில் பிறந்த எங்களுக்கு எவ்வளவு எரியும் ஆன்ட்டி. எல்லாத்தையும் நாங்க பாத்துக்கிறோம். வயசான காலத்துல உங்க ஹெல்த்த பாத்துக்கோங்க என்று சொல்லி அபிராமி மிகவும் காட்டமாக குட்டி பத்மினிக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதோடு வயதான காலத்தில் உங்களுக்கு இது தேவையா எனவும் மோசமாக கேட்டுள்ளார்.

கலாஷேத்ராவுக்கு ஆதரவாகவும், 89 ஆண்டுகள் பழமையான கல்வி நிலையம் என்பதற்காக அங்கு குற்றமே நடக்கவில்லை என்றும் அபிராமி பேசி வருவதாக நெட்டிசன்கள் அவரை கிழித்தெடுத்து வருகின்றனர். இப்போது குட்டி பத்மினி பேசியதற்கு மோசமாக, அவரது வயதை எல்லாம் வைத்து ரிப்ளை கொடுத்துள்ளார். அதே சமயம் நல்ல குடும்பத்தில் பிறந்த பெண் இப்படி செய்யலாமா என பேசியதற்கும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. கடைசியில் மாணவிகளுக்கு நீதி கேட்டு தொடங்கப்பட்ட போராட்டம் பற்றி யாரும் பேசாமல் அபிராமியை மட்டும் டார்கெட் செய்தும், பதிலுக்கு அபிராமி தன்னை விமர்சிப்பவர்களை டார்கெட் செய்தும் பேசி இந்த விவாகரத்தையே திசை திருப்பி வருகின்றனர் என்பது தான் வேதனையின் உச்சம்.

மேலும் படிக்க | இயக்குநர் லிங்குசாமியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி! சென்னை நீதிமன்றம் தீர்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *