Loading

பொதுவாகவே, குழந்தைகளுக்கும் தாத்தா – பாட்டிகளுக்கு இடையிலான உறவு என்பது மிகவும் நெருக்கமானதாக இருக்கும். குழந்தைகள் சொல்வது அனைத்தையும் பாட்டி – தாத்தா நிறைவேற்றுபவர்களாக இருப்பார்கள். அதோடு, அவர்களுக்கு ஒன்று என்றால் துடித்து போவார்கள். அம்மா – அப்பா கோபித்துக் கொண்டால், பாட்டி – தாத்தா தான் அவர்களுக்கு பாதுகாப்பான அடைக்கலமாக தெரிவார்கள். அது போன்ற நொரு ஸ்வாரஸ்யமான சம்பவமாக, தாயிடம் சண்டை போட்ட 11 வயது சீன சிறுவன், தனது தாயின் மீது புகார் அளிக்க கிட்டத்தட்ட 24 மணிநேரம் சைக்கிளில் தனது பாட்டியை சென்றடைந்தான். சுமார் 130 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டி சென்று பாட்டியை சந்தித்த சமப்வம் ஒரு சேர அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதன் பிறகு என்ன நடந்தது என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. 

சீனாவில் உள்ள உள்ளூர் ஊடகமான Meileijiang வெளியிட்டுள்ள செய்தியில், ஏப்ரல் 2 அன்று சுரங்கப்பாதை ஒன்றில் ஒரு சிறுவன் சோர்வாகவும் தனியாகவும் தனது சைக்கிளில் கடந்து செல்வதை வழிப்போக்கர்கள் கண்டனர். அதை அடுத்து போலிசார் சிறுவனை அழைத்துச் செல்ல வந்தபோது, ​​​​கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்சோவில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவர் 22 மணி நேரம் சுமார் 130 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டிச் சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அம்மா திட்டியதால் கோபமடைந்த பையன் 

தனது தாயுடன் சண்டையிட்ட நிலையில், சிறுவன் 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜெஜியாங்கில் உள்ள மீஜியாங்கில் உள்ள தனது பாட்டி வீட்டிற்குச் சென்று தனது குறைகளை தெரிவிக்க முயன்றான். சாலையில் உள்ள சைன் போர்டுகளை கவனிக்கவில்லை என்றும், மீண்டும் மீண்டும் தவறான திருப்பங்களை எடுத்ததாகவும் சிறுவன் ஒப்புக்கொண்டான். தூரத்தை கடக்க இரண்டு மடங்கு அதிக நேரம் எடுத்தாலும், பாட்டி வீட்டில் இருந்து இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே அவன் இருந்தான். இரவு சைக்கிளில் சென்ற போது வீட்டில் இருந்து கொண்டு வந்த ரொட்டி சாப்பிட்டு தண்ணீர் குடித்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க | தலையணை உறைக்குள் இருந்த மலைப்பாம்பு… பெண்ணுக்கு நேர்ந்த பகீர் அனுபவம்!

வழியில் போலீசார் அவரை பிடித்து ரயிலில் அழைத்து சென்றனர்

அந்த சிறுவனை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற பிறகு, உதவி இல்லாமல் நடக்க முடியாத அளவுக்கு சோர்வாக இருந்ததால், அதிகாரிகள் அவரை காரில் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. மாலையில் சிறுவனின் பாட்டி மற்றும் பெற்றோர் இருவரும் அவரை அழைத்துச் செல்ல வந்தனர். சிறுவனின் தாய், கோபத்தில் உனது பாட்டியின் வீட்டிற்குச் செல்லுமாறு சிறுவனை கடிந்து கொண்டதாக கூறினார். துணிச்சலான சிறுவனின் நீண்ட தூரப் பயணம், இணையத்தில் மிகவும் வைரலாகும் இந்த கதையைப் படித்த பலரைத் திகைக்க வைத்தது. மேலும் சிலர் அவனது “பழிவாங்கல்” நடவடிக்கை எப்படி மாறியது என்று ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

மேலும் படிக்க | கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை “மேம்பட்ட” ICBM சோதனையை நடத்தியது ரஷ்யா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *