முதலாவது மகளிர் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதப்போவது யார் என்பதற்காக பிளே ஆப் போட்டி மும்பை மற்றும் உ.பி. அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வருகிறது.

முதலாவது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மகளிர் கேப்டன் ஹர்மன் ப்ரித் ஹவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மேக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ், ஆஸ்திரேலிய வீராங்கனை அலிஷா ஹீலே தலைமையிலான உ.பி. வாரியர்ஸ், இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஆஸ்திரேலிய வீராங்கனை பேத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் என 5 அணிகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் விளையாடினர்.

image

இதில் லீக் சுற்று முடிவில் டாப்-3 (டெல்லி, மும்பை, உ.பி.) இடங்களைப் பிடித்த அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறின. அதன்படி, கடந்த 21ஆம் தேதி இரண்டு பிளே ஆப் போட்டிகள் நடைபெற்றன. அன்று மதியம் நடைபெற்ற முதலாவது பிளே ஆப் போட்டியில் மும்பையும் பெங்களூருவும் மோதின. இதில் பெங்களூருவை வீழ்த்தி மும்பை அணிக்கு முதலிடத்துக்கு முன்னேறியது. ஆனால், இது அன்று மாலை நடைபெற்ற உ.பி.வாரியர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி முடிவின்போது மாறியது.

ஆம், இவ்விரு அணிகளுக்கு இடையே போட்டியில் உ.பி.யை வீழ்த்தி டெல்லி அணி, பாயிண்ட்ஸ் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்தது. இதையடுத்து மும்பை 2வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. 3வது இடத்தை உ.பி. பிடித்தது. இந்த நிலையில், இறுதிச் சுற்றுக்கு 2வது அணியாக முன்னேறுவதற்கு இவ்விரு அணிகளுக்கு இடையே இன்று பிளே ஆப் சுற்றுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் அணி, வரும் 26ஆம் தேதி டெல்லி அணியுடன் மோதும்.

image

அந்த வகையில், இன்று நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் ஜெயித்த உ.பி. வாரியர்ஸ் அணி பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து பேட் செய்ய களமிறங்கிய மும்பை அணியில், யாஷ்திகா பாட்டியா 21 ரன்களிலும், மேத்யூஸ் 26 ரன்களிலும் வெளியேறினாலும், நாட் சிவர் புருண்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 38 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். அதில் 9 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடக்கம். கேப்டன் கவுர் 14 ரன்களும், அமீலியா கெர் 29 ரன்களும், பூஜா 11 ரன்களும் எடுக்க மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. உ.பி. தரப்பில் சோபி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் விளையாடி வருகிறது. தற்போது அந்த அணி 14 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, இன்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புள்ளது. ஆகையால், டெல்லி அணியுடன் மும்பை அணியே இறுதிப்போட்டியில் நிலவும் சூழல் உள்ளது. ஆக, டெல்லியுடன் மும்பை மோதினாலும் அந்த அணியும் இந்த மகளிர் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: