கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறை நிலைவும் நிலையில், உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவில் இருந்து இரண்டு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்துள்ளது. வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். அரசின் வர்த்தக பொதுக் கூட்டு அமைப்பு முட்டைகளை இறக்குமதி செய்துள்ளதாகவும், முட்டைகள் இலங்கை வந்துள்ளதாகவும் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மூன்று நாட்களுக்குள் முட்டைகள் சந்தைக்கு அனுப்பப்படும். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அமைச்சரவைக் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பெர்னாண்டோ விளக்கமளித்துள்ளார்.

இதற்கிடையில், கொழும்பில் வெளிநாட்டு தூதுவர்களுடன் சந்திப்புகளை நடத்தி சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முக்கியமான கடன் உதவி திட்டத்தை எதிர்க்கட்சிகள் முறியடிக்க முயற்சிப்பதாக இலங்கை அரசாங்கம் வியாழன் அன்று குற்றம் சாட்டியது. நாட்டில் உள்ளூராட்சித் தேர்தல்கள் தாமதம் ஆவதால்,  கடன் உதவி வழங்க கடுமையான நிபந்தனைகளை விதிக்க ஒத்துழைக்குமாறு  சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை வைப்பதன் மூலம் எதிர்க்கட்சி கடன் உதவித் திட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதாக அரசாங்கம் கூறியது.

எதிர்க்கட்சிகள் மீதான அரசு குற்றசாட்டு

கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கை தேசத்தின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுவதற்காக IMF 3 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்த சில நாட்களுக்குப் பிறகு இந்தக் குற்றச்சாட்டு எழுந்தது. வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான இரகசிய சந்திப்பில், சர்வதேச நாணய நிதியம் எப்பொழுது உதவிகளை வழங்குவது என்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான நிபந்தனைகளை கோரியுள்ளதாக அரசாங்கத்தின் பிரதான கொறடாவும் நகர அபிவிருத்தி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை தாமதப்படுத்துமாறு அல்லது கடுமையான நிபந்தனைகளை விதிக்குமாறு வெளிநாட்டுத் தூதுவர்களை எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது. மக்கள் வீதிக்கு வந்துள்ள இவ்வேளையில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | இலங்கை: ஷாக்கில் மக்கள்!! இன்று முதல் மின்சார கட்டணம் 66% அதிகரிப்பு!!

வெளிநாட்டுத் தூதுவர்களுடன் சந்திப்பு

முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேக்யா (SJB) வெளிநாட்டு தூதர்களுடனான சந்திப்பு நடத்தியதை அமோதித்தது. எனினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை தெரிவிப்பதற்காக மட்டுமே, எதிர்க்கட்சிகள் வெளிநாட்டுத் தூதுவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேம்தாஸ், வெளிநாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்பு, உள்நாட்டுப் பிரச்சினைகளைப் பயன்படுத்தி நாட்டுக்கு அளிக்கப்படும் முக்கியமான வெளிநாட்டு உதவிகளைக் குறைக்கும் நோக்கத்தில் அமைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்தார். இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் ஜேக்கப், அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சுங் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் ஆகியோர் கலந்து கொண்டதாக உள்ளூர் ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | இலங்கை சிறையில் வாடும் 28 மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *