Loading

India

oi-Vigneshkumar

Google Oneindia Tamil News

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவிட வீடியோ எடுத்த நபர் ஒருவர் பழைய கட்டிடத்தின் மேலே இருந்து கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நவீன உலகில் அனைத்துமே இணையத்தைச் சுற்றியே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அதிக லைக்ஸ்களை அள்ள வேண்டும் என்பதையே இந்தக் காலத்தில் இளைஞர்கள் குறியாக வைத்து வருகின்றனர்.

இதனால் சில நேரங்களில் அவர்கள் எல்லை மீறிச் செல்கிறார்கள். இது கடைசியில் அவர்களின் உயிருக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகிறது.

குளியலறைக்கு போன கல்லூரி மாணவி.. நீண்ட நேரமாக திறக்காத கதவு.. நடந்த விபரீதம் குளியலறைக்கு போன கல்லூரி மாணவி.. நீண்ட நேரமாக திறக்காத கதவு.. நடந்த விபரீதம்

 மோசமான சம்பவம்

மோசமான சம்பவம்

அப்படி நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ஆபத்தை உணராமல் இணையத்தில் வரும் லைக்ஸ்களுக்கு ஆசைப்பட்டால் அது கடைசியில் பெரிய ஆபத்திலே முடியும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தனது கல்லூரி நண்பர்களுடன்
இன்ஸ்டாகிராம் ரீல்ஸிற்கு வீடியோ எடுக்க இளைஞர் ஒருவர் முயன்றுள்ளார்.

 20 வயது இளைஞர்

20 வயது இளைஞர்

இதற்காக ஜன்னலுக்கு மேலே இருக்கும் சிறு சுவரில் அவர் இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது அத்தனையும் உடன் இருந்த மாணவர்கள் ரீல்ஸிற்காக படம் பிடித்ததில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் சத்தீஸ்கர் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள அறிவியல் கல்லூரி வளாகத்தில் பிற்பகல் நேரத்தில் நடந்துள்ளது. இதில் உயிரிழந்தவர் 20 வயதான அசுதோஷ் சாஹு என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

 ரீல்ஸ் வீடியோ

ரீல்ஸ் வீடியோ

இருப்பினும், இந்த விவகாரம் குறித்து இளைஞரின் தந்தை புகார் அளிக்கவில்லை என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வீடியோ இணையத்தில் இப்போது பரவி வரும் நிலையில், அதன் அடிப்படையில் சர்கண்டா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிசிஏ படிக்கும் சாஹு தனது நண்பர்களுடன் அங்குள்ள பழைய கட்டிடம் ஒன்றின் மொட்டை மாடிக்குச் சென்றனர்.. பழமையான கட்டிடம் எனத் தெரிந்தும், அங்கு ஜன்னலுக்கு மேலே உள்ள சன் ஷேட்டின் மேல் அவர் ஏறியுள்ளார்.

 லைட் வெயிட்

லைட் வெயிட்

அப்போது அவரது நண்பர் ஒருவர், “நீ ரொம்ப லைட் வெயிட்.. அதனால் உனது எடைக்கு எல்லாம் இது உடையாது” என்று கூறுகிறார். அதற்கு சாஹு, “நான் இந்த சன் ஷேட்டின் மேலே இருந்து அடுத்த சன் ஷேட்டின் ஜம்ப் செய்ய முடியாது. நான் மாட்டிக் கொள்வேன்” என்கிறார். அதற்கு அவரது நண்பர், “அதெல்லாம் முடியும். நான் ஒரு வீடியோ எடுத்துட்டு இருக்கேன். ட்ரை பண்ணு” என்கிறார். அடுத்த சில நொடிகளில் அந்த சன் ஷேட்டின் இருந்து விழுந்த 15 முதல் 20 அடி கீழே அந்த இளைஞர் விழுந்துள்ளார். அதில் அவரது விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்பு

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதிலும் அந்த இளைஞர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள அம்மாவட்ட எஸ்பி சந்தோஷ் சிங், “பிலாஸ்பூர் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நண்பர்களுடன் இன்ஸ்டாகிராம் ரீல் எடுக்கும் போது, ​​இளைஞர் ஒருவர் கீழே விழுந்தார். அவரை காப்பாற்ற முடியவில்லை. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எல்லா நேரங்களிலும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்” என்று பதிவிட்டுள்ளார்.

English summary

A 20-year-old youth falls from building while trying to film an Instagram reel: Youth fell down from old construction building.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *